ARTICLE AD BOX
இந்தியாவுக்கு வரும் டெஸ்லா நிறுவனத்தில் வேலை வாங்கணுமா? இந்த கல்வித்தகுதி இருந்தா போதும்.!!
உலகின் பல்வேறு நாடுகளில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், தற்போது இந்தியாவில் அதன் விற்பனையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்கை சந்தித்தார். இதன்பிறகு இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு வர உள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறலாம். இந்த வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் மற்றும் அதற்கான தகுதிகள் வெளியாகி உள்ளன.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது டெஸ்லா கார் நிறுவனம். டெஸ்லா மின்சார வாகனங்களுக்கு மட்டுமல்ல, நிலையான எரிசக்தித் துறையிலும் மிகப் பெரிய நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்தநிலையில், டெஸ்லா நிறுவனம், தற்போது இந்தியாவில் அதன் விற்பனையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் டெஸ்லா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, டெல்லியின் ஏரோ சிட்டி பகுதியிலும், மும்பையின் பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியிலும் இரண்டு ஷோரூம்களுக்கான இடங்களை அந்நிறுவனம் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டெஸ்லா நிறுவனத்தில் செய்ய உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் இங்கு வேலை பெறுவது எளிதானது அல்ல. இந்தியாவிலிருந்து பலர் இந்த நிறுவனத்தில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். அதன்படி, பொறியியல், வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் வணிக செயல்பாடுகள் போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதற்காக, ஆட்சேர்ப்பு பணியில் டெஸ்லா நிறுவனம் இறங்கியுள்ளது. முக்கியமாக, அந்த நிறுவனம் அதன் குழுவில் பணியாற்றும் நபர்களின் திறன்கள், அனுபவம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இப்படியான சூழலில், டெஸ்லா இந்திய இளைஞர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆகவே, டெஸ்லாவில் உள்ள வேலைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான தகுதிகள் என்ன என்பதை பார்ப்போம்."
வாகனங்களை மேம்படுத்த பொறியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு தகுதிகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் பொறியாளர் பதவிக்கு, மின் அல்லது மின்னணு பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல் இன்ஜினியர் பதவிக்கு, இயந்திர பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Software Engineer பதவிக்கு கணினி அறிவியல் அல்லது மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். Robotics Engineer பதவிக்கு ரோபாட்டிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ்(mechatronics) அல்லது கணினி அறிவியலில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். Manufacturing Specialist பதவிக்கு தொழில்துறை அல்லது உற்பத்தி பொறியியலில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
வணிகம் மற்றும் செயல்பாடுகளை(Business and Operations) கவனிக்கும் பதவிகளுக்கு Supply Chain Manager வணிக நிர்வாகம் அல்லது தளவாடங்களில் இளங்கலை பட்டம் அல்லது எம்பிஏ பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். Finance and Accounting பதவிக்கு, நிதி, கணக்கியல் அல்லது பொருளாதாரத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Marketing and Sales பிரிவில் மார்க்கெட்டிங் அல்லது வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Design and Technician: தயாரிப்பு மற்றும் கிராஃபிக் டிசைன் பணிகளுக்கு அதிகளவில் ஆட்கள் தேவைப்படுகின்றன. இதற்கான தகுதிகள் பின்வருமாறு:
Product Designer: தொழில்துறை அல்லது தயாரிப்பு வடிவமைப்பில்(Product Designer) பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கிராஃபிக் டிசைனர் பதவிக்கு associate degree in HVAC, Mechatronics or Mechanical Systems-ல் சான்றிதழ் அல்லது இணை பட்டம் பெற்றிருக்கவேண்டும். Battery Technician பதவிக்கு வேதியியல் அல்லது மின்னணுவியலில் சான்றிதழ் அல்லது இணை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.