ARTICLE AD BOX
ஜம்மு - காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கவராதி ஃபைசல் நதீம் என்கிற அபு கத்தால் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார்.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சையது என்பவரின் நெருக்கிய கூட்டாளியான கத்தால் உள்பட மேலும் 2 பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதற்காக தேசிய புலனாய்வு மையத்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டனர்.
இதையும் படிக்க | காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!
ராஜௌரியில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அபு கத்தால், சைஃபுல்லா எனும் சாஜித் ஜுட், மொஹமத் காசிம் ஆகியோர் ஈடுபட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டது.
அபு கத்தால் மற்றும் சாஜித் ஜுட் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். காசிம் 2002 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குச் சென்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்தார்.
இவர்கள் மூவரும் பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை ஆள்சேர்ப்பு செய்து, அவர்களை பயங்கரவாத செயல்களை செய்வதற்குத் தூண்டி, ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரையும், பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சையத் கத்தால் இன்று சுட்டுக் கொலப்பட்டடதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.