ARTICLE AD BOX
நகரங்களில் நாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதை விட ஒரு இயந்திரம்போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரங்களை விட்டு கிராமங்களுக்கு செல்லும்போது நமக்கு கிடைக்கும் மன அமைதி ஆஹா வார்த்தைகளால் எழுத்துக்களால் எழுத முடியாது. மன அமைதியும் மகிழ்ச்சியும் வித்தியாசமான அனுபவங்களையும் கொண்ட இந்தியாவில் உள்ள 7 மலை கிராமங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
கல்பா, இமாச்சல பிரதேசம்:
சட்லஜ் நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கிராமத்தை அற்புதமான இயற்கைக்காட்சிகள் அரண்களாக சூழ்ந்திருக்கின்றன. ஆப்பிள் தோட்டங்கள், அழகான மடங்கள், கோவில்கள், கின்னார் கைலாஷ் மலை என அமைதியான சூழலை ரசிக்க வைக்கும் இடங்கள் ஏராளம் அமைந்திருக்கின்றன.
கஜ்ஜியார், இமாச்சல பிரதேசம்:
இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் 'இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. அழகிய புல்வெளிகள், பசுமை படர்ந்திருக்கும் தேவதாரு காடுகள், பனி படர்ந்த மலைகள் கொண்ட அழகிய நிலப்பரப்புகள் என மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும் இடமாக இது விளங்குகிறது. இங்குள்ள ஆப்பிள் தோட்டங்கள் கஜ்ஜியாரில் பார்க்க வேண்டிய இடம்.
வரங்கா, கர்நாடகா;
பசுமை சூழப்பட்ட அமைதியான, மலைப்பாங்கான இந்த கிராமம் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 850 ஆண்டுகள் பழமையான ஏரி கோவில் (கேரே பசாதி), 1,200 ஆண்டுகள் பழமையான நேமிநாத கோவில் உள்ளிட்ட பாரம்பரிய கட்டமைப்புகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. ஏரியின் நடுவே அமைக்கப் பட்டுள்ள ஏரி கோவிலுக்கு படகு மூலம் மட்டுமே செல்ல முடியும்.
டார்ச்சிக், லடாக் (காஷ்மீர்);
இமயமலையில் அமைந்துள்ள லடாக்கின் ஆரியன் பள்ளத்தாக்கை சூழ்ந்திருக்கும் கிராமங்களில் டார்ச்சிக், தனி சிறப்பு பெற்றது. அங்கு வீசும் தூய்மையான காற்றும், அழகிய நிலப்பரப்பும், அருகே ஓடும் நதியும் இந்த கிராமத்தின் அடையாளமாக விளங்குகின்றன. பவுத்த டார்ட் பழங் குடியினரின் தாயகமாகவும் அமைந்திருக்கிறது. நீல நிறத்தில் ஓடும் நதியின் பின்னணியில் காட்சி தரும் வன சூழல் மனதை கொள்ளை கொள்ளும்.
ஜூலுக், சிக்கிம்;
இமயமலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குக்கிராமம், சிக்கிமில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்த பகுதியில் இந்திய ராணுவ தளம் உள்ளது. பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளை இங்கு காண முடியும். கோடை காலங்களில் இந்த கிராமத்தை சுற்றியுள்ள மலை பிரதேசங்களில் ரோடோடென்ட்ரான் பூக்கள் பூத்து குலுங்கும் காட்சி கண்களை குளிர்ச்சியடைய செய்துவிடும்.
கலாப், உத்தரகாண்ட்;
இந்த கிராமம் கர்வால் பகுதியில் 7,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பைன் மற்றும் தேவதாரு காடுகள் இந்த கிராமத்தின் பின்னணியில் அழகுற காட்சி அளிக்கின்றன. இங்கு ஓடும் சுபின் நதி கிராமத்தின் இயற்கை சூழலுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. இந்த கிராமத்தில் கோதுமை, தினை, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவை பயிரிடப்படுகின்றன. விவசாயம் நிறைந்து இருப்பது கூடுதல் சிறப்பு.
இந்த கிராமங்களுக்கு ஒரு விசிட் அடியுங்கள் உங்கள் மனநிலை நிச்சயமாக இயற்கை அழகைப் பார்த்து உற்சாகமடைந்து மன அமைதிகொள்ளும்.