இந்தியாவில் இரு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரே மாவட்டம்.. அப்போ சிஎம் யார்? குழப்பமா இருக்கே

21 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவில் இரு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரே மாவட்டம்.. அப்போ சிஎம் யார்? குழப்பமா இருக்கே

Delhi
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா பல தனித்துவமான அதிசயங்களைக் கொண்ட நாடாக ஒன்றாக இருக்கிறது. இங்கு உள்ள கலாச்சாரம், ஆடை அமைப்பு ஆகியவற்றை வேறு எங்கும் நம்மால் பார்க்கவே முடியாது. இந்தியாவில் பல்வேறு மாவட்டங்கள் உள்ள நிலையில், எப்போதும் ஒரு மாவட்டம் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், ஒரே ஒரு மாவட்டம் மட்டும் இரு மாநிலங்களில் உள்ளன. அது என்ன மாவட்டம். அதன் சிறப்பம்சம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது நாடு பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலமும் நிர்வாக வசதிக்காக பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எளிதாகத் தேவையான திட்டங்களை அரசால் செயல்படுத்த முடிகிறது.

india offbeat

இரு மாநிலங்களில் உள்ள மாவட்டம்

நமது நாட்டில் எப்போதும் ஒரு மாவட்டம் என்பது குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், நாட்டில் ஒரே ஒரு மாவட்டம் மட்டும் இரு வெவ்வேறு மாநிலங்களில் உள்ளது.. இப்படி ஒரு மாவட்டம் இரு மாநிலங்களிலும் அமைந்துவிட சில வரலாற்று முடிவுகளும், மாநில எல்லைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணமாகும். இதனால் இந்த குறிப்பிட்ட மாவட்டத்தில் வாழும் மக்கள் இரு வேறு மாநில விதிகளைப் பின்பற்ற நேரிடுகிறது. இது நமது நாட்டில் ஒரு தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.

இந்தியா பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கொண்டதாக உள்ள நிலையில், நாடு முழுக்க மொத்தம் 788 மாவட்டங்கள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகத்தை ஒழுங்கமைக்கவும், அரசுத் திட்டங்களைச் சீராக வழங்குவதை உறுதி செய்யவும், நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவுமே இதுபோல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

சித்ரகூட்:

இதனால் எந்தவொரு மாவட்டமாக இருந்தாலும் அது எப்போதும் ஒரு மாநிலத்தின் கீழ் தான் வரும். ஆனால், சித்ரகூட் என்ற மாவட்டம் மட்டும் இதில் தனித்துவமாக இருக்கிறது. இது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் என்று இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் பரந்து விரிந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் இரு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் என்ற சாதனையை சித்ரகூட் படைத்துள்ளது.

india offbeat

எந்த மாநிலத்தில் வரும்:

வடக்கு விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள சித்ரகூட் இரு மாநிலங்களின் எல்லைகளில் நீண்டுள்ளது. தற்போது சித்ரகூட் மாவட்டத்தின் நான்கு தாலுகாக்கள் - கர்வி, ராஜாபூர், மாவ் மற்றும் மனக்பூர் உத்தரப் பிரதேசத்தில் உள்ளன. இந்த 4 தாலுகாக்கள் உபி கீழ் வரும். ஆனால், அந்த மாவட்டத்தின் பிரதான பகுதியான சித்ரகூட் நகர் மட்டும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிறது. இது மத்தியப் பிரதேச ஆட்சியின் கீழ் வரும். இதன் மூலம் இரு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் என்ற சாதனையை சித்ரகூட் படைத்துள்ளது.

பர்சனல் லோன் வாங்க போறீங்களா? எவ்வளவு சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும்! அதை அதிகரிப்பது எப்படி?
பர்சனல் லோன் வாங்க போறீங்களா? எவ்வளவு சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும்! அதை அதிகரிப்பது எப்படி?

முக்கியத்துவம்:

சித்ரகூட் என்பது வரலாற்று ரீதியாகவும் முக்கியமான ஒரு மாவட்டமாக இருக்கிறது. இந்து மதம் மற்றும் புராணங்களில் சித்ரகூட் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ராமர், தன் மனைவி சீதா மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் வனவாசம் சென்ற போது, குறிப்பிட்ட காலத்தை இந்த சித்ரகூட் பகுதியில் தான் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்துக்கள் மத்தியில் இது மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த சித்ரகூட் பகுதிக்கு வருவார்கள். இங்குள்ள முக்கிய ஆன்மீக தலங்கள் குறித்து நாம் பார்க்கலாம். முதலில் காமத்கிரி மலை.. இதுதான் ராமர் தங்கிய இடமாகக் கருதப்படுகிறது.. எனவே, இந்த மலையைச் சுற்றி வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது இங்கு வரும் இந்துக்களின் நம்பிக்கை.

ஆன்மீக இடங்கள்:

குப்ட் கோதாவரி குகை: ராமரும் லட்சுமணனும் வனவாசத்தின் போது இந்த குகையில் தான் தங்கி இருந்ததாக நம்பப்படுகிறது. இது தவிர அனுமன் தாரா சதி அனுசுயா மற்றும் பர்தகூபா ஆகியவையும் ஆன்மீக ரீதியாக முக்கிய இடங்களாகக் கருதப்படுகிறது. இங்கு ஓடும் மந்தாகினி ஆறு, இப்பகுதியில் ஓடும் ஒரு புனித நதியாகக் கருதப்படுகிறது.

More From
Prev
Next
English summary
Discover the fascinating district that defies geographical norms by being part of two Indian states: All things to know about Chitrakoot the district in two states
Read Entire Article