Gold Rate Today: சனி, ஞாயிறுக்கு பின் சரிந்த தங்கம் விலை! சென்னையில் சவரன் எவ்வளவு?

12 hours ago
ARTICLE AD BOX

Gold Rate Today: சனி, ஞாயிறுக்கு பின் சரிந்த தங்கம் விலை! சென்னையில் சவரன் எவ்வளவு?

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (ஜனவரி 27-ஆம் தேதி) சவரனுக்கு ரூ 120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ 60,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் கிராமுக்கு ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஜனவரி 27-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ 60,320-க்கும், கிராமுக்கு ரூ 15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7540-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையிலும் கிராமுக்கு ரூ 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate gold price

அது போல் 24 காரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 65,936க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு கிராம் ரூ 8,242 ஆகும். அது போல் 18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ 49,840-க்கும் ஒரு கிராம் ரூ 6,230-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் நாளே தங்கம் விலையில் அதிரடியாக உயர்ந்திருந்தது.

அதன் பின்னரும் 22 கேரட் தங்கம் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் தை மாதம் பிறந்து முகூர்த்த நாட்கள் வரவிருக்கும் நிலையில் தங்கம் விலையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 26 நாட்களாக 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:

27.01.2025- ஒரு சவரன் ரூ.60,320
26.01.2025- ஒரு சவரன் ரூ.60,440
25.01.2025- ஒரு சவரன் ரூ.60,440
24.01.2025- ஒரு சவரன் ரூ.60,440
23.01.2025- ஒரு சவரன் ரூ.60,200
22.01.2025- ஒரு சவரன் ரூ.60,200
21.01.2025- ஒரு சவரன் ரூ.59,600
20.01.2025- ஒரு சவரன் ரூ.59,600
19.01.2025- ஒரு சவரன் ரூ.59,480
18.01.2025- ஒரு சவரன் ரூ.59,480
17.01.2025- ஒரு சவரன் ரூ.59,600
16.01.2025- ஒரு சவரன் ரூ.59,120
15.01.2025- ஒரு சவரன் ரூ.58,720
14.01.2025- ஒரு சவரன் ரூ.58,640
13.01.2025- ஒரு சவரன் ரூ.58,720
12.01.2025- ஒரு சவரன் ரூ.58,520
11.01.2025- ஒரு சவரன் ரூ.58,520
10.01.2025- ஒரு சவரன் ரூ.58,280
09.01.2025- ஒரு சவரன் ரூ.58,080
08.01.2025- ஒரு சவரன் ரூ.57,800
07.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
06.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
05.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
04.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
03.01.2025- ஒரு சவரன் ரூ 58,080
02.01.2025- ஒரு சவரன் ரூ 57,400
01.01.2025- ஒரு சவரன் ரூ 57,200

ஜனவரி மாதத்தில் கடந்த 24 நாட்களில் கடந்த 1ஆம் தேதி மட்டுமே தங்கத்தின் விலை குறைந்திருந்தது. தங்கம் விலை உச்சபட்சமாக கடந்த 22ஆம் தேதியும் 24ஆம் தேதியும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது முதல்முறையாக சவரன் ரூ 60 ஆயிரத்தை தாண்டியது.

டிசம்பர் மாதம் தங்கம் விலை: டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஒரு கிராம் ரூ 7150 க்கு விற்பனையானது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று ஒரு கிராம் ரூ 7,110-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்திலேயே தங்கம் விலை அதிகரித்தது என்றால் அது டிசம்பர் 11 ஆம் தேதிதான், அன்றுதான் ஒரு கிராம் ரூ 7,285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் தங்கம் விலை டிசம்பர் 20ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ 7,040 என குறைந்தது.

More From
Prev
Next
English summary
Gold Rate Today (தங்கம் விலை இன்று) [27th January 2025]: சென்னையில் தங்கம் விலையில் இன்றும் (ஜனவரி 27-ஆம் தேதி) மாற்றமில்லாததால் ஒரு சவரன் ரூ 60,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ 7540 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read Entire Article