இந்தியாவில் அதிக வரி செலுத்தும் திரை பிரபலம் அமிதாப் பச்சன்...!

13 hours ago
ARTICLE AD BOX

இந்தியா திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் இந்தியாவில் அதிக வரி செலுத்தும் திரை பிரபலம் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். 


அமிதாப் பச்சன் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 120 கோடி வரி செலுத்தியுள்ளார். இந்திய திரைத்துறையின் பெரும் நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன், 2024-25 நிதியாண்டில் ரூ. 350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இதற்காக இவர் ரூ. 120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்தும் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார். ambithab

முன்னதாக அமிதாப் பச்சன் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மூத்த சட்டத்துறை அலுவலர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய தலைவராக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த நிதியாண்டில் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ள ரூ. 120 கோடி வரி, அவர் ஏற்கனவே செலுத்திய வரியை விட 69 சதவீதம் அதிகம் ஆகும். அமிதாப் பச்சன் வரிசையில், நடிகர் ஷாரூக் கான், சல்மான் மற்றும்
விஜய் ஆகியோர் அதிக வரி செலுத்தும் பிரபலங்களாக உள்ளனர். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் ரூ. 92 கோடி வரி செலுத்திய ஷாரூக் கான் முதலிடத்தில் இருந்தார்.

Read Entire Article