ARTICLE AD BOX
இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு தாக்குதல்கள் குறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துல்சி கப்பார்ட், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியா – அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பல நாடுகளைப் பாதித்த அச்சுறுத்தல் என்றும் கூறினார்.
இன்று முன்னதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த கப்பார்ட், ”பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அதைத் தோற்கடிக்க இணைந்து செயல்படுகின்றனர். இந்தியா மீதான தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தானில் இருந்து டிரம்ப் நிர்வாகம் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதமாக கருதுகிறது.
ஜனாதிபதி டிரம்ப், தனது முதல் ஆட்சி காலத்தில் இருந்து இப்போதும் தொடர்ந்து, துரதிர்ஷ்டவசமாக நம்மைப் பாதித்துள்ள, அமெரிக்க மக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்து வரும், தொடர்ந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். இது இந்தியாவிலும், பங்களாதேஷிலும் உள்ள மக்களை எவ்வாறு பாதித்து வருகிறது என்பதை நாம் காண்கிறோம். தற்போது சிரியா, இஸ்ரேல், மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இது பிரதமர் மோடியும், தீவிரமாக எடுத்துக் கொள்ளும் ஒரு அச்சுறுத்தலாகும். அதை அடையாளம் கண்டு தோற்கடிக்க எங்கள் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பது எனக்குத் தெரியும்” என அவர் தெரிவித்தார்.
“என்னுடைய சொந்த ஆன்மீக பயிற்சி, கடவுளுடனான எனது தனிப்பட்ட உறவுதான் என் வாழ்க்கையின் மையம். கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழவும், அதைச் செய்வதற்கான சிறந்த வழி என்னவாக இருந்தாலும், கடவுளின் அனைத்து குழந்தைகளுக்கும் சேவை செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் ஒவ்வொரு நாளும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். எனவே, எனது வாழ்க்கையின் வெவ்வேறு காலங்களில், உலகின் பல்வேறு பகுதிகளில் போர் மண்டலங்களில் பணியாற்றினாலும் சரி, இப்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களாக இருந்தாலும் சரி, பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கற்பித்த போதனைகளை நான் சிறந்த மற்றும் மோசமான காலங்களில் நோக்கித் திரும்புகிறேன்.
கிருஷ்ணரிடம் இருந்து அர்ஜுனனுக்கு கிடைத்த முக்கியமான போதனைகளைக் கற்றுக்கொள்கிறேன். அவை எனக்கு வலிமையைத் தருகின்றன. எனக்கு அமைதியைத் தருகின்றன. அவை எல்லா நாட்களிலும் எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், துளசி கப்பார்ட் இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தபோது, அமெரிக்காவில் காலிஸ்தானி சீக்கியர் அமைப்பின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்தியா பிரச்சினையை எழுப்பியது. இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தியதுடன், சட்டவிரோத அமைப்புக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.
துல்சி கப்பார் இந்தியாவில் இருப்பதில் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்திய உணவு மீதான தனது அன்பைப் பற்றியும் பேசினார். “இந்தியாவை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் இங்கு இருக்கும்போது எப்போதும் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.
துல்சி கப்பார்ட் தனது பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் வருகை இது. கப்பார்டின் ஆசியப் பயணம் மார்ச் 18 அன்று ரைசினா மாநாட்டுடன் முடிவடைகிறது.