இந்தியா: தனிநபர்களின் மாத வருமானம்; ` EMI-க்கே போகும் 33% தொகை' - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

3 days ago
ARTICLE AD BOX

``இந்தியா முழுவதும் சம்பளம் வாங்கும் தனிநபர்கள் தங்கள் மாத வருமானத்தில் 33 சதவிதத்துக்கும் அதிகமான தொகையை கடன் EMI-களை செலுத்துவதற்கு ஒதுக்குகிறார்கள். இது கடன் சார்ந்த நுகர்வு அதிகரித்து வரும் சிக்கலை வெளிப்படுத்துகிறது" என ஆய்வு முடிவு வெளியாகியிருக்கிறது. How India Spends: A Deep Dive into Consumer Spending Behavior என்ற தலைப்பில் B2B SaaS Fintech நிறுவனமான Perfios, PwC India உடன் இணைந்து ஆய்வு நடத்தியிருக்கிறது.

emi

இந்த ஆய்வின் முடிவில் வெளியாகியிருக்கும் அறிக்கையில், ``இந்தியா முழுவதும், அடுக்கு 3 நகரங்கள் முதல் பெருநகரப் பகுதிகள் வரை... மாதத்திற்கு ரூ.20,000 முதல் ரூ.1,00,000 வரையிலான வருமானம் ஈட்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட, தொழில்நுட்ப ஆர்வமுள்ள நுகர்வோரிடம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நுகர்வோரின் மொத்த செலவினங்களில் 39 சதவிகிதம் கட்டாய செலவினங்களுக்கும், 32 சதவிகிதம் தேவைகளுக்கும், 29 சதவிகிதம் விருப்பப்படி செலவு செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

வாழ்க்கை முறை

தங்களின் விருப்பப்படி செலவு செய்வதற்கு ஒதுக்கும் பணத்தில் 62 சதவிகித தொகை பேஷன் பொருள்கள், அழகு சாதனங்கள், நவீனத்துவத்தை முன்னிறுத்தும் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு செலவிடுகிறார்கள். இதில், பேஷனுக்காக மட்டும் அதாவது ஆடை, ஆபரணங்களுக்காக மட்டும் 20 சதவிகிதப் பணம் செலவிடப்படுகிறது. ஒரு பெரும் நகரத்தில் வாழும் ஒருவர் தனக்காக செலவிடும் தொகை ரூ.2,022. அதே மூன்றாம் அடுக்கு நகரத்தில் வசிக்கும் ஒருவர் ரூ.1,882 செலவிடுகிறார். மேலும், மக்களின் வாழ்க்கை முறையில் ஷாப்பிங், பிராண்ட், ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்துகிறது. ஆன்லைன் ஷாப்பிங் செல்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செலவு
செலவுகள்

தனிநபர்களின் சம்பளம் அதிகரிக்கும் போது, ​​வெளியே சாப்பிடுவது, உணவை ஆர்டர் செய்வது போன்ற உணவு தொடர்பான செலவுகள் அதிகரித்திருக்கிறது. தொடக்க நிலை வருமானம் (ரூ20,000) ஈட்டுபவர்களில் 22 சதவிகிதத்தினர் ஆன்லைன் கேமிங் பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களில் சம்பளம் ரூ.75,000-க்கு மேல் உயரும்போது இந்த சதவிகிதம் 12 - ஆகக் குறைகிறது. இரண்டாம் அடுக்கு நகரங்களில் சராசரி வாடகைச் செலவை விட முதலாம் அடுக்கு நகரங்களில் வசிப்பவர்களின் வாடகை செலவு 4.5 சதவிகிதத்தை விட அதிகமாக இருக்கிறது.

அதேநேரம், இரண்டாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்த தனி நபர்கள், முதலாம் அடுக்கில் வசிப்பவர்களைவிட விட மருத்துவச் செலவுகளுக்கு 20 சதவிகிதம் அதிகமாகச் செலவிடுகிறார்கள். மேலும், பெரும்பாலான நகரங்களில் யுபிஐ போன்ற பரிவர்த்தனைகளின் கட்டணங்களும் செலவினங்களில் முக்கியப் பங்குபெறுகிறது. அனைத்து நகர அடுக்குகளிலும் உள்ள தனிநபர்கள் தங்கள் வருமானத்தில் 33% க்கும் அதிகமான தொகையை கடன் EMI-களை செலுத்துவதற்கு ஒதுக்குகிறார்கள்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் செலவு... கூடுதல் சந்தோஷம்... இப்படிக் கொண்டாடினால் எல்லா நாளுமே... காதலர் தினம்தான்!
Read Entire Article