“இந்தியா Vs பாகிஸ்தான்”… எந்த நாட்டின் கிரிக்கெட் அணி சிறந்தது…? பிரதமர் மோடி அல்டிமேட் பதில்…!!

13 hours ago
ARTICLE AD BOX

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரபல கணினி விஞ்ஞானியும் பாட்ஸ்காட்  லெக்ஸ் ஃப்ரிட்மானுடன் பேசிய போது, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் விளையாட்டு பிரச்சினைகள் குறித்த பல்வேறு அம்சங்களை விவாதித்தார். குறிப்பாக, விளையாட்டின் சக்தி உலகை ஒருமைப்படுத்தும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார். “விளையாட்டு என்பது வெறும் போட்டியாக இருக்கக் கூடாது. அது உலக மக்களை இணைக்கும் பெரிய சக்தியாகும்,” என்று மோடி தெரிவித்தார். கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள், நாடுகளுக்கு இடையிலான இடைவெளிகளை குறைக்கும் ஒரு பாலமாக செயல்படலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது மோடியிடம் இந்தியா-பாகிஸ்தான் அணிகளில் யார் சிறந்தவர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் நேரடி பதிலளிப்பதை தவிர்த்து, அணிகளின் சமீபத்திய விளையாட்டு முடிவுகள் தான் உண்மையை கூறுவதாக கூறினார். “நான் ஒரு விளையாட்டு நிபுணர் அல்ல, எனவே யார் சிறந்தவர் என்பதைக் கூற முடியாது. ஆனால் சில நேரங்களில், விளையாட்டு முடிவுகளே யார் சிறந்த அணி என்பதை காட்டுகிறது. சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் முடிவு எதை கூறுகிறது என்பதே அதற்கு விடையாக இருக்கும்” என மோடி தெரிவித்தார். அவரது பதில், இந்தியா அணியின் சமீபத்திய வெற்றியை சுட்டிக்காட்டுவதாகவும், மேலும் விளையாட்டை அரசியல் வாதமாக்க கூடாது என்பதற்கான ஒரு உந்துசக்தியாகவும் காணப்படுகிறது.

 

मोदीजी भी कमाल का खेलते है

इन-डायरेक्टली पाकिस्तान को कह ही दिया

ईस्ट और वेस्ट टीम इंडिया इज़ द बेस्ट pic.twitter.com/N4FZNNqX5p

— Hardik Bhavsar (@Bitt2DA) March 16, 2025

Read Entire Article