ARTICLE AD BOX
இந்தியர்கள் மத்தியில் பிரபலமாகும் Holiday homes... இது புது டிரெண்டா இருக்கே?
இந்தியாவில் தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மலைப்பாங்கான பகுதிகளில் சென்று சில நாட்கள் ஓய்வெடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
பணி அழுத்தங்கள் மற்றும் பிற பொறுப்புகளில் இருந்து விடுதலை பெற்று ரிலாக்ஸ் ஆக வேண்டும் என்ற மனநிலை அனைவரிடமும் வந்துவிட்டது . அந்த வகையில் பெரும்பாலான இந்திய இளைஞர்கள், இளம் தம்பதிகள் ஹாலிடே ஹோம்ஸ் (Holiday homes) எனப்படும் விடுமுறை காலங்களில் சென்று ஓய்வு எடுக்க எடுப்பதற்காகவே சுத்தமான காற்று ,அமைதியான ஒரு இடம் , பசுமை சார்ந்த பகுதி என அனைத்து பணிச் சுமைகள் மற்றும் குடும்ப பொறுப்புகளில் இருந்து சில தினங்களுக்கு விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே Holiday homes என்ற டிரண்ட் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு விடுமுறை நாட்களில் பொழுதை கழிப்பதற்காக மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் கடலோரங்களில் இருக்கக்கூடிய வீடுகளை வாங்குவது தற்போது அதிகரித்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
குறிப்பாக இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களில் சுமார் 54 சதவீதம் பேர் மலை பாங்கான பகுதிகள் அல்லது கடற்கரையோரங்களில் சொந்தமாக வீடுகளை வாங்கி வைத்திருக்கிறார்கள். இதனை ஹாலிடே ஹோம் என அழைக்கிறார்கள். தாங்கள் தற்போது குடியிருக்க கூடிய பகுதியிலிருந்து 5 மணி நேரம் பயணம் செய்தாலே தங்கக்கூடிய இடங்களில் இந்த ஹாலிடே ஹோம்களை வாங்குகிறார்களாம்.
அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹாலிடே ஹோம்கள் அதிகமாக கோவாவில் தான் இருக்கிறதாம். அது தவிர ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் கடலோர நகரங்களில் வீடுகளை வாங்குகிறார்கள். விடுமுறை காலங்களில் இவர்கள் செல்லும் போது தங்குவதற்கும் மற்ற நேரங்களில் வாடகைக்கு விடுத்து வாடகை வருமானம் பெறுவதற்கும் பயன்படுத்தி கொள்கிறார்களாம்.

இந்தியாவில் இத்தகைய ஹாலிடே ஹோம்களை வாங்கும் போக்கு 2023ஆம் ஆண்டில் 41% உயர்ந்துள்ளதாம். இந்த வீடுகளில் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்பதை பலரும் விரும்புகிறார்களாம். அதேபோல தன்னுடைய செல்லப்பிராணிகளை அழைத்து சென்று தங்கும் வகையிலான வீடுகளுக்கு தற்போது முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் மலைப்பகுதிகளில் இருக்கும் வில்லாக்களை வாங்கும் போக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 சதவீதம் அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்கள் கூறுகின்றன. ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநிலத்தில் குறிப்பாக கசௌலி என்ற இடத்தில் தான் இப்படி பலரும் வீடுகளை வாங்கி குவிக்கின்றனர். இத்தகைய ஹாலிடே ஹோம்களின் விலை 2 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாய் வரை இருக்கிறது.
Story written by: Devika