ARTICLE AD BOX

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். அதாவது மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது.
அதே நேரத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 4ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.