இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

6 hours ago
ARTICLE AD BOX

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தனது மகள் ஷாஹ்சாதி என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஷாஹ்சாதி தந்தை கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், ஷாஹ்சாதியை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக கூறினார். ஆனால், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.
 
தனது மகள் தொடர்பான தகவலுக்காக   நீதிமன்றத்தை அவருடைய தந்தை நாடிய நிலையில், ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
துபாயைச் சேர்ந்த தம்பதியின் நான்கரை மாத குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷாஹ்சாதி என்ற பெண்ணுக்கு அந்நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
Read Entire Article