ARTICLE AD BOX
இந்தியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்த நிலையில், முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 856 புள்ளிகள் சரிந்து 74 , 454 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 242 புள்ளிகள் இறங்கி 22 ஆயிரத்து 553 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. மும்பைப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்பு 402 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 397 கோடியே 90 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரையிலான நாட்களில் சென்செக்ஸ் 5.19 சதவீதமும், நிப்ஃடி 5.06 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.