ARTICLE AD BOX
Published : 18 Mar 2025 05:02 AM
Last Updated : 18 Mar 2025 05:02 AM
இந்தி தேசிய மொழி; ஆங்கிலம் சர்வதேச மொழி: முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து

மொழி என்பது ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள பயன்படுவது மட்டுமே. தாய்மொழியே சிறந்தது. ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி. தேவைப்பட்டால் பல மொழிகளை கற்கலாம். ஆதலால் மொழி அரசியல் தேவையற்றது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்தி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பேசியதாவது: தற்போதைய சூழலில் ஆங்கிலம் கற்றால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நிலை உள்ளது. மொழி என்பது அறிவை வளர்க்க உதவும். ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள மொழி பயன்படுகிறது. ஆனால், தாய்மொழி மிகவும் முக்கியமானது.
தாய்மொழியில் பயின்றவர்களே அதிக அறிவு சார்ந்தவர்களாக உள்ளனர். இதில் சந்தேகம் இல்லை. எந்த ஒரு மொழியையும் தாழ்த்தி பேசக்கூடாது. இங்கு தாய்மொழி தெலுங்கு. ஹிந்தி தேசிய மொழி. ஆங்கிலம் சர்வதேச மொழி. நம் நாட்டு மக்கள், மாணவர்கள் கல்வி பயிலவோ அல்லது வேலை நிமித்தமாகவோ ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்கின்றனர்.
தேவைப்பட்டால் ஜப்பான், பிரெஞ்ச் மொழிகளை இங்கேயே கற்றுக்கொண்டால், அங்கு செல்லும்போது மிகவும் சுலபமாக அங்குள்ள மக்களிடம் பழகலாம். வாழ்வதற்காக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தாய்மொழியை மறக்க மாட்டோம். தேசிய மொழியான ஹிந்தியை கற்றுக்கொண்டால் டெல்லி செல்லும்போது மற்றவர்களிடம் கூச்சப்படாமல் பேசலாம். ஆதலால் மொழி குறித்து அரசியல் செய்வது தேவையற்றது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- பிஹார் மாணவியின் மருத்துவர் கனவு: உதவி செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி
- காலனித்துவ அடையாளங்களை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி எம்பி பாராட்டு
- சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
- பிரதமர் மோடியுடன் நியூஸி. பிரதமர் கிறிஸ்டோபர் ஆலோசனை: தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு