இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ...!

21 hours ago
ARTICLE AD BOX

இந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி, சுழல் இணைய தொடரின் இரண்டாவது சீசன், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.
 
இந்த வார ஓடிடி வெளியீடாக தமிழில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் முக்கியமான வெப் சீரிஸ் ஒன்றும் வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி

அஜித்குமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியான திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க அஜார்பைஜானில் படம்பிடிக்கப்பட்ட ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் மாஸ் காட்சிகள் பெரிதாக இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படம் தற்போது மார்ச் 3ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  

பராரி

ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி'. இயக்குனர் ராஜு முருகன் இந்த படத்தை வழங்கியுள்ளார். அடித்தட்டு மக்களுக்குள்ளும் இருக்கும் சாதிய பிரச்சனைகளை மிக இயல்பாக ஆணித்தரமாக பேசக்கூடிய படமாக பராரி இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பராரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.  தற்போது பராரி திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

குடும்பஸ்தன்

 சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள படம் 'குடும்பஸ்தன்'. இதில் மணிகண்டன் மற்றும் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு  இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் நாளை பிப்ரவரி 28ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாட்டல் ராதா

தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’பாட்டல் ராதா’. குடிப்பழக்கத்தால் அடிமையாகி இருக்கும் நபரின் வாழ்க்கையிலும், அவரது குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கடத்திய திரைப்படம். இயக்குநர் பா.ரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருந்தார். மக்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


சங்கராந்திகி வஸ்துன்னம்

இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கில் மட்டும் வெளியாகி 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வசதியுள்ளது.


சங்கராந்தி பண்டிக்கைக்கு வெளியான ’கேம் சேஞ்சர்’ போன்ற படங்களைவிட அதிக வசூல் செய்த தெலுங்கு படமாக மாறியுள்ளது. முழுக்க முழுக்க குடும்ப நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்பட மார்ச் 1ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் நன்றாக ஓடியதால் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுழல் 2 The Vortex சீசன் 2

இதுவரை தமிழில் வெளிவந்த வெப்சீரிஸ்களில் முக்கியமான வெப் சீரிஸ் சுழல்.  கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், குமரவேல், ஸ்ரேயா ரெட்டி என பலர் நடிப்பில்  2022ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான சுழல் வெப் சீரிஸானது குற்றம், மர்மம், விசாரணை, சஸ்பென்ஸ் என பல்வேறு தளங்களில் அசத்தலாக வெளி வந்திருந்தது.  இந்த வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் எப்போது வெளியாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுழல் The Vortex பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகிறது. முதல் சீசனை உருவாக்கிய இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரியே இந்த சீசனையும் உருவாக்கியுள்ளனர்.  

லவ் அண்டர் கன்ஸ்ட்ரக்‌ஷன்

மலையாளத்தில் உருவாகியுள்ள நகைச்சுவை வெப் சீரிஸ் Love Under Construction. புது வீடு கட்டும் கனவை நினைவாக்கும் இளைஞர் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் காதலை நிறைவேற்ற எதிர்கொள்ளும் சிக்கல்களே கதைக்களம். இத்தொடர் பிப்ரவரி 28ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


டப்பா கார்டெல்

ஷபானா ஆஸ்மி, ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த வெப் சீரியஸை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார். தானேவில் வாழும் ஐந்து சராசரி குடும்பத்து பெண்கள் செய்யும் அசாதரணமான வேலைகளையும் அவர்களது நெருக்கடிகளையும் த்ரில்லர் பாணியில் பேசும் தொடர் இது. பிப்ரவரி 28ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Read Entire Article