ARTICLE AD BOX

Sarkar: விஜய் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் அமைந்தால் சர்க்கார் படம்தான் தற்போது சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற பெயரில் உருவாகிய வருவதாக தகவல்கள் கசிந்தது. இது குறித்து தற்போது அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு ஏற்ற கருத்துக்களை சொல்லி ஹிட் அடித்த இயக்குனர்களின் முக்கியமானவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான எல்லா திரைப்படங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இருந்தாலும் ஏ ஆர் முருகதாஸ் மீதும் காப்பி கேட் சர்ச்சை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை கோலிவுட்டிலும் சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தை பாலிவுட்டிலும் இயக்கி வருகிறார்.

சிக்கந்தர் என்ற பெயரில் பாலிவுட்டில் உருவாகி வரும் அப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து சமீபத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்தை சர்க்கார் படத்தின் ரீமேக் என ரசிகர்கள் நினைத்து வந்தனர்.
கிட்டத்தட்ட டீசர் வெளியாகி சிக்கந்தர் படத்தை பார்ப்பதற்கு சர்க்கார் போலவே இருப்பதால் இது ரீமேக் தான் என பலரும் உறுதிப்படுத்தினர். ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி சிக்கந்தர் திரைப்படம் ஏ ஆர் முருகதாஸின் சொந்தக்கதை என்றும் அதை எந்த படத்தின் ரீமேக் இல்லை என்றும் தகவல்கள் கசிந்திருக்கிறது.
ஏற்கனவே பாலிவுட் திரையுலகம் தொடர்ச்சியாக தமிழ் படங்களை ரீமேக் செய்து நஷ்டத்தை சந்தித்து வருவதால் இப்படத்தை ரீமேக்காக எடுக்க சல்மான் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் ரிலீஸ் வரை இந்த கிசுகிசுப்புகள் இருக்கும் என்றும், அதன்பின்னரே இதற்கு தெளிவான முடிவு வரலாம் என்றும் கூறப்படுகிறது.