ARTICLE AD BOX
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22-ம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கோப்பையை கைப்பற்றப்போகும் அணி இதுதான் : சவுரவ் கங்குலி
இந்நிலையில் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதி போட்டி வரை சென்று வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போதே அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் அதுகுறித்த விவாதங்களும் தற்போதே அதிகரித்துவிட்டன.
அதேபோன்று இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்றும் யார் அதிக விக்கெட் வீழ்த்துவார்கள்? யார் அதிக ரன்கள் அடிப்பார்கள்? என்பது குறித்த கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும்? என்பது குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை இப்போதே கூற முடியாது. ஏனெனில் எந்த ஐபிஎல் தொடரானது மிக நீண்ட தொடர். அதே போன்று இந்த தொடரில் வெற்றி பெற அனைத்து அணிகளுமே கடுமையாக போட்டி போடும் என்பதனால் தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியாளரை கணிப்பது கடினம். ஆனால் தொடர் பாதியை கடக்கும் போது நிச்சயமாக யார் வெற்றிபெறுவார்கள் என்று கூறமுடியும்.
அதே வேளையில் இந்த தொடரை பொறுத்தவரை நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இந்த முறையும் கோப்பையை வெல்லும் அளவிற்கு வலிமையான அணியாக இருக்கிறது. நிச்சயம் இந்த முறையும் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதே போன்று ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் போட்டியில் நிச்சயமாக கொல்கத்தா அணி தான் வெற்றி பெறும்.
இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தல தோனி – சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சம்பவம்
ஏனெனில் தற்போதைய கொல்கத்தா அணி கடந்த ஆண்டு விட இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும். அதே போன்று வருண் சக்ரவர்த்தி முன்பை விட சிறப்பாக பந்துவீசி வருவதால் அவர் அதிக விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.
The post இந்த வருஷமும் அவங்க தான் ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்க சான்ஸ் இருக்கு – கங்குலி வெளிப்படை appeared first on Cric Tamil.