ARTICLE AD BOX
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அஜிங்க்யா ரஹானே கேப்டனாக இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.
2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிக எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த பதற்றமும் இன்றி மிக எளிதாக 175 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சின் போது ரஹானேவின் கேப்டன்சி சுமாராக இருந்ததாக ரெய்னா மற்றும் உத்தப்பா விமர்சனம் செய்துள்ளனர்.
அந்தப் போட்டியில் சுனில் நரைனை முன்பே பந்து வீச அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவரை ஐந்தாவதாக அழைத்தது ஏன்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசியது சுனில் நரைன் மட்டுமே. அவர் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசினார். வருண் சக்ரவர்த்தி அதிக ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில் சுனில் நரைன் மிகக் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இது பற்றி சுரேஷ் ரெய்னா பேசுகையில், "அஜிங்க்யா ரஹானே மற்றவர்களை விட முதலில் சுனில் நரைனையும், ஹர்ஷித் ராணாவையும் பந்து வீச அழைத்து இருக்க வேண்டும். சுனில் நரைன் இதற்கு முன் விராட் கோலியை நான்கு முறை வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு இன்னிங்ஸின் துவக்கத்திலேயே பந்து வீச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ரஹானே இன்னும் கேப்டன்சி பற்றி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.
CSK vs MI: மும்பை இந்தியன்ஸ் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.. 12 வருடமாக இதே கதைதான்.. சிஎஸ்கே ஈஸி வெற்றி
ராபின் உத்தப்பா பேசுகையில், "அஜிங்க்யா ரஹானே டெஸ்ட் போட்டிகளில் நல்ல கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால், ஒரு டி20 போட்டிகளில் அவர் கேப்டனாக இன்னும் துடிப்பாக செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். அவர் இன்னும் கேப்டனாக முன்னேற வேண்டும்" என்றார்.
செய்தி சுருக்கம்:
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவின் கேப்டன்சியை சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளனர்.
- சுனில் நரைனை முன்னதாக பந்து வீச அழைத்திருக்க வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ரஹானே கேப்டன்சியில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என ரெய்னா கூறியுள்ளார்.
- ரஹானே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என உத்தப்பா கூறியுள்ளார்.