இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்புகளில் ஒன்றாகும். இந்திய ரயில்வே ரயிலின் வேகம், பயணிகளின் வசதி, பாதுகாப்பு, மற்றும் அவசர சேவைகளை முன்னிலைப்படுத்தி பல்வேறு முக்கிய ரயில்களை இயக்கி வருகிறது. இவற்றில் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படும் சில முக்கிய ரயில்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு ரயில் பாதைகள் ஒதுக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே நிர்வாகம் அதிக முக்கியத்துவம் தரும் அந்த 7 ரயில்கள் இவைகள் தான்.

1. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே அதிவேகமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ரயிலாகும். இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 180 கிமீ.,க்கு மேல் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் அதிநவீன வசதிகள், பயணிகள் நலன் சார்ந்த அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பம் போன்ற இதன் செயல்பாடுகள், இந்திய ரயில்வேயின் பெருமையாக கருதப்படுகிறது.
2.சதாப்தி எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் மெட்ரோ நகரங்களில் இருந்து மற்ற முக்கிய நகரங்களுக்கு இடையே ஒரு நாளுக்குள் வேகமாக பயணிக்கும் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் உள்ள நவீன சிறப்பம்சங்கள், ஏசி வசதிகள் மற்றும் உணவு சேவை போன்ற வசதிகளுக்காக பயணிகள் இந்த ரயில் சேவையை அதிகமான பயணிகள் தேர்வு செய்கிறார்கள்.

3. ராஜதானி எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் 1969ஆம் ஆண்டில் அறிமுகமாகிய இந்த ரயில், தலைநகரான டில்லியுடன் மாநில தலைநகரங்களை இணைக்கும் வேகமான நீண்ட தூர பிரீமியம் ரயில் ஆகும். இதன் வேகம், சரியான நேரம், உயர்தர உணவு சேவை, ஏசி பயண வசதிகள், மற்றும் குறைந்த நிறுத்தங்கள் ஆகிய காரணங்களால் இந்த ரயில் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
4.துரந்தோ எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் முக்கிய பெரு நகரங்கள் மற்றும் மாநில தலைநகரங்களை குறைந்த நிறுத்தங்கள் கொண்ட நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் ஆகும். இந்த ரயிலில் நவீன தொழில்நுட்பம் கொண்ட பயண வசதிகள், சமையலறை கொண்ட உணவு சேவை, அதிவேகம் மற்றும் குறித்த நேரப்பயணம் ஆகிய அம்சங்களால் பிரபலமானதாகும்.

5. தேஜஸ் எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தனியார் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் முதல் மிதவேக ரயில் ஆகும். முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள், சிறந்த உட்புற வடிவமைப்பு, Wi-Fi வசதி, LCD திரைகள், மற்றும் சுயசேவை உணவு போன்ற வசதிகளால் பயணிகளுக்கு விரைவான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதால் இந்த ரயிலுக்கு மிகுந்த மவுசு அதிகம்.
6. கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிக குறைந்த கட்டணத்தில் உயர் தரத்தில் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் இயங்கும் ரயில் ஆகும். தாமதமின்றி குறித்த நேரத்தில், வசதியான பயணத்தை வழங்குவதால் இந்த ரயிலுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
7. விபத்து, நிவாரண மற்றும் மருத்துவ உபகரண ரயில் (ARME):
இந்திய ஜானாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட இந்த ரயில், தற்போது விபத்துக்கள் மற்றும் அவசர நிலைகளில் உடனடி மருத்துவ உதவி வழங்கிட அதிநவீன மருத்துவ சாதனங்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்காக செயல்படுகிறது. இந்த ரயில் மற்ற ரயில்களை விட அதிக முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை உடையது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet