இந்த பிரச்சனை மூட்டுகளில் வலியை ஏற்படுத்துதா? நீங்க சாப்பிடக் கூடாத '7' உணவுகள்

5 hours ago
ARTICLE AD BOX

யூரிக் ஆசிட் பிரச்சினை உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை குறித்து இங்கு காணலாம்.

Foods To Avoid High Uric Acid : இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் உடலில் யூரிக் அமிலம் இருப்பது ஒரு பொதுவான பிரச்சினையாகிவிட்டது. இந்த பிரச்சனையானது குறிப்பாக கீழ்வாதம் மற்றும் மூட்டு வலியை தான் ஏற்படுத்தும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அது படிகங்களாக மாறி மூட்டுகளில் வீக்கம், வலி மற்றும் விறைப்பு தன்மையை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் யூரிக் அமில பிரச்சனைகள் பாதிக்கப்பட்டிருந்தால் சில உணவுகளை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அது என்ன மாதிரியான உணவுகள் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பால் பொருட்கள்

சீஸ், பால், தயிர் போன்ற பால் பொருட்கள் யூரிக் அமில அளவை அதிகரிக்க செய்யும். மேலும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் நல்லது என்றாலும் அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது தவிர்க்க வேண்டும்.

இறைச்சி

மாட்டிறைச்சி, ஆட்டிறச்சி மற்றும் பன்றி இறைச்சியில் அதிகளவு புரதம் மற்றும் பியூரின்கள் உள்ளதால், இது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்யும். எனவே இவற்றை நீங்கள் அதிகமாக சாப்பிட்டால் உங்களது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக வீக்கம் மற்றும் வலியை அதிகரிக்க செய்யும்.

ஆல்கஹால்

ஆல்கஹாலில் குறிப்பாக பீர் குடித்தால் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும். இது உடலின் இயற்கையான வடிகட்டுதல் செயல்முறை பாதித்து யூரிக் அமிலம் உடலை விட்டு வெளியேறுவதை தடுக்கும். இதனால் வீக்கம் மற்றும் வலி அதிகரிக்கும்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளில் அதிக அளவு புரதம் உள்ளதால், அவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் யூரிக் அமிலத்தில் அளவு அதிகரிக்கும். எனவே மத்தி, நெத்திலி, சூரை, நண்டு
போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிக்கும். இதனால் கீழ்வாத பிரச்சனையும் மோசமாகும்.

சர்க்கரை மற்றும் சோடா

அதிகப்படியான சர்க்கரை மற்றும் சோடா உள்ள பானங்களில் அதிக அளவு பிரக்டோஸ் உள்ளதால் இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே இவற்றை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: உடலில் யூரிக் அமில அளவை குறைக்கும் '5' காலை பழக்கங்கள்!!

துரித உணவுகள்

அதிகப்படியான உப்பு, எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கொண்ட துரித உணவுகள் யூரிக் அமில அளவை அதிகரிக்க செய்யும். எனவே உடலில் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைக்க இதுபோன்று உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க:  யூரிக் அமிலத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த கீரை மூட்டு வலியைக் குறைக்கும்!

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால், இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் வீக்கம் மற்றும் வலி பிரச்சனையும் அதிகரிக்கும்.

Read Entire Article