இந்த படம் பிரேமலு மாதிரி கலெக்சன் எடுக்கும்…. ‘2K லவ் ஸ்டோரி’ குறித்து சுசீந்திரன்!

7 hours ago
ARTICLE AD BOX

2K லவ் ஸ்டோரி படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் பேசியுள்ளார்.இந்த படம் பிரேமலு மாதிரி கலெக்சன் எடுக்கும்.... '2K லவ் ஸ்டோரி' குறித்து சுசீந்திரன்!இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் இவர், மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவரது இயக்கத்தில் 2K லவ் ஸ்டோரி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அறிமுக நடிகர் ஜெகவீர் கதாநாயகனாக நடிக்க மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து பால சரவணன், வினோதினி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் பிரேமலு மாதிரி கலெக்சன் எடுக்கும்.... '2K லவ் ஸ்டோரி' குறித்து சுசீந்திரன்!ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது 2025 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன், “2K லவ் ஸ்டோரி திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்த படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. பிரேமலு படத்தை போல் இந்த படம் அதிக அளவில் கலெக்ஷன் எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article