ARTICLE AD BOX
சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும்.
நியாயமான தொகுதி மறுசீரமைப்பிற்கான நமது உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதல்-மந்திரிகளையும், அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு நான் அன்புடன் வரவேற்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :