"இந்த ஒருங்கிணைப்பு என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே.. இன்னும் அவர்களுக்கு..." - டி.கே. சிவக்குமார்

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

நாடாமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் டி.கே. சிவக்குமாரை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.கே. சிவக்குமார், "தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கம் சென்னை கூட்டம். மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம்.

இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல் படியை எடுத்து வைத்துள்ளது பெருமையாக உள்ளது. தொகுதிகள் குறைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம்.

இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம் மட்டுமே.. இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. இந்த கூட்டு நடவடிக்கை குழு மிகப் பெரிய வெற்றி அடையும் என நம்புகிறேன்" என்று கூறினார்.


Read Entire Article