ARTICLE AD BOX
வாழ்வில் முன்னேற்றம் அடைவதே அனைவரின் இலக்காக உள்ளது. ஆனால் சில மோசமான பழக்க வழக்கங்கள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. அந்த வகையில் நம்முடைய கேரியரையே காலி செய்யும் 8 பழக்க வழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.புகழை விரும்புதல்
அங்கீகாரம் பெற்று புகழடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அனைத்துக்கும் தலையாட்டுவது, பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, அனைவரையும் திருப்திபடுத்த முயல்வது ஆகியவை நம்முடைய அதிகாரத்தை குறைத்துவிடும். ஆகவே மரியாதையை சம்பாதிக்க உங்கள் முடிவுகளில் உறுதியாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். புகழ் மங்கிவிடும். ஆனால், மரியாதை என்றென்றும் நிலைத்திருக்கும்.
2) புலப்படாமல் இருத்தல்
கடின உழைப்பு அதுவாக கவனிக்கப்படும் என்று நம்பி, உங்கள் பங்களிப்புகளை தீவிரமாக வெளிப் படுத்தாவிட்டால், உங்கள் சாதனைகள் கவனிக்கப்படாமல் போகலாம். ஆகவே கலந்துரையாடல்களில் வெளிப்படையாக பேசி உங்கள் சாதனைகளை பகிர்ந்து கொண்டு வாய்ப்புகளை உருவாக்குங்கள். வாய்ப்புகள் உங்கள் மடியில் விழும் வரை காத்திருக்காதீர்கள்.
3) விமர்சனங்களை கண்டு அஞ்சுதல்
வளர்ச்சிக்கு விமர்சனங்கள் முக்கியம் என்பதால், அவற்றை பர்சனலாக எடுத்துக் கொள்ளாமல் விமர்சனம் என்பது நம்மை மேம்படுத்துவதற்கும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு என்று நினைத்துக்கொண்டு விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள்.
4.எப்போதும் பிஸி!
அர்த்தமுள்ள முடிவுகளை எடுக்காமல் எப்போதும் பிசியாக பணிகளை செய்வதால் மட்டும் முன்னேற்றம் அடைந்துவிட முடியாது. ஆதலால்அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்கு நோக்கி செயல்பட கவனம் செலுத்துங்கள். ஏனெனில் அளவை விட தரமே எப்போதும் முக்கியம்.
5) பிரச்னைகளை தவிர்த்தல்
தீர்க்கப்படாத கடினமான பிரச்னைகளை தவிர்ப்பது குறுகிய காலத்துக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும் . ஆகையால் உரையாடல்கள் சங்கடமானவையாக இருந்தாலும் பிரச்சனைகளை நேரடியாக பேசி, சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது தலைமை பண்பையும் நுண்ணறிவையும் வெளிப்படுத்தும் .
6) தனிமை விரும்பி
திறமையின்மையின் அடையாளம் மற்றும் பலவீனமாக உதவி கேட்பதை நினைக்காமல், நம் வரம்புக்குட்பட்டு மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவது, சுயவிழிப்புணர்வு மற்றும் பணிவு ஆகியவற்றை கற்றுக்கொள்ளும் விருப்பத்தை வெளிப்படுத்தும் என்பதால் தேவைப்படும் சமயங்களில் தனியாக இல்லாமல் அடுத்தவர் உதவியை நாடுவது மிகவும் நல்லது.
7) நம்பகத்தன்மையை இழத்தல்
வேலையை தாமதப்படுத்தி, காலக்கெடுப்பை தவற விட்டு, உறுதி மொழிகளை பின்பற்றத் தவறினால் உங்களை நம்பத் தயங்குவர். ஆகையால் வாக்குறுதிகளை நிறைவேற்றி, சவால்களை எதிர்கொண்டு, நிலையான பணி நெறிமுறைகளை பேணுவது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்.
8) சாக்குபோக்கு
மனிதனின் இயல்பான சாக்கு போக்கு சொல்வது நம்பிக்கையை உடைத்து நம்பகத்தன்மையை குறைத்து விடும். ஆகவே தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்று அவற்றிற்கான தீர்வுகளை கண்டுபிடித்து தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள் .
மேற்கண்ட 8 பழக்க வழக்கங்களை விட்டொழித்து வெற்றி பாதைக்கு திரும்புங்கள்.