இதை விட வேறென்ன வேணும்.. 50எம்பி செல்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

4 hours ago
ARTICLE AD BOX

இதை விட வேறென்ன வேணும்.. 50எம்பி செல்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Monday, March 3, 2025, 22:39 [IST]

சாம்சங் (Samsung) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G ) ஸ்மார்ட்போன் தான் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இந்த சாம்சங் போனுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,585 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.16,585 விலையில் வாங்கிவிட முடியும்.

இதை விட வேறென்ன வேணும்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications) : குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம்
மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2400 பிக்சல்கள். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilizyion Technology), 10x டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங், டூயல் ரெக்கார்டிங் (Dual Recording) உள்ளிட்ட கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

இதை விட வேறென்ன வேணும்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். பின்பு IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் 5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி மாடல். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
50 Percent Discount on Samsung Galaxy F55 5G with 8GB Ram in Amazon Sale
Read Entire Article