Jio Phone களுக்கு குட்பை.. மியூசிக் பட்டன், 2500mAh பேட்டரி, 32GB.. HMD 130 Music, HMD 150 Music அறிமுகம்!

10 hours ago
ARTICLE AD BOX

Jio Phone களுக்கு குட்பை.. மியூசிக் பட்டன், 2500mAh பேட்டரி, 32GB.. HMD 130 Music, HMD 150 Music அறிமுகம்!

Mobile
oi-Muthuraj
| Published: Monday, March 3, 2025, 19:32 [IST]

எம்டபிள்யூசி 2025 (MWC 2025) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2025 (Mobile World Congress 2025) நிகழ்வில்.. நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை தன்வசம் கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது பல புதிய மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

இந்நிறுவனம் எச்எம்டி பார்கா 3210 (HMD Barca 3210), எச்எம்டி 2660 பிளிப் (HMD 2660 Flip), எச்எம்டி 130 மியூசிக் (HMD 130 Music) மற்றும் எச்எம்டி 150 மியூசிக் (HMD 150 Music) ஆகிய 4 பீச்சர் போன்களையும், எச்எம்டி பியூஷன் எக்ஸ்1 (HMD Fusion X1) மற்றும் எச்எம்டி பார்கா ஃப்யூஷன் (HMD Barca Fusion) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது.

HMD 130 Music, HMD 150 Music அறிமுகம்!

இதோடு எச்எம்டி ஆம்பெட் பட்ஸ் என்கிற வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை பற்றிய விரிவான கட்டுரைக்கு இங்கே கிளிக் செய்யவும் எச்எம்டி 2660 பிளிப் மொபைல் போனை பற்றிய விரிவான கட்டுரைக்கு இங்கே கிளிக் செய்யவும். எச்எம்டி பியூஷன் எக்ஸ்1 ஸ்மார்ட்போனை போனை பற்றிய விரிவான கட்டுரைக்கு இங்கே கிளிக் செய்யவும். எச்எம்டி 130 மியூசிக் மற்றும் எச்எம்டி 150 மியூசிக் பற்றிய விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்:

எச்எம்டி 130 மியூசிக் மற்றும் 150 மியூசிக் ஆகிய 2 ஃபீச்சர் போன்களுமே ரெட்ரோ ஆஸ்தெடிக்ஸ் மற்றும் மியூசிக் பிளேபேக்கில் கவனம் செலுத்துகின்றன. எச்எம்டி 130 மியூசிக் மாடல் ஆனது டார்க் கிரே, ப்ளூ மற்றும் ரெட் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். அதேசமயம் எச்எம்டி 150 மியூசிக் மாடல் ஆனது டார்க் கிரே, பர்பில் மற்றும் லைட் ப்ளூ ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இரண்டு மாடல்களும் 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே, 8எம்பி ரேம் மற்றும் 82எம்பி ஸ்டோரேஜ் உடன் வருகின்றன. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை 32ஜிபி வரை விரிவாக்கலாம். மேலும் மியூசிக் பிளேபேக்கிற்கு இரண்டுமே பிரத்யேக மியூசிக் பட்டன்களுடன், பின்புறத்தில் 2W ஸ்பீக்கரை கொண்டுள்ளன. கூடவே 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கையும் கொண்டுள்ளன.

மேலும் எச்எம்டி 130 மியூசிக் மற்றும் 150 மியூசிக் ஆகிய 2 மாடல்களுமே 2,500mAh நீக்கக்கூடிய பேட்டரி மற்றும் யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் உடன் வருகின்றன. இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால் எச்எம்டி 130 மியூசிக் போனின் மேற்புறத்தில் டூயல் டார்ச் மாட்யூல் (Dual Torch Module) உள்ளது. இந்த 2 மாடல்களின் இந்திய அறிமுகம் மற்றும் விலை குறித்த விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

எச்எம்டி 2660 ஃபிளிப் மொபைல் போனின் முக்கிய அம்சங்கள்:

- 2.8-இன்ச் QVGA மெயின் டிஸ்பிளே
- 1.77-இன்ச் கவர் டிஸ்பிளே
- நம்பர்களுக்கான பெரிய பட்டன்கள்
- டி9 மெசேஜிங் ஆதரவு (T9 Messaging Feature)
- ஃபிளிப் டு ஆன்சர் கால் அம்சம் (Flip to Answer Call)
- 0.3எம்பி சிங்கிள் ரியர் கேமரா
- கேமரா ஃபிளாஷ்; அதுவே டார்ச் எல்இடி லைட் ஆகவும் செயல்படும்

- ப்ளூடூத் 4.2 மற்றும் வோல்ட்இ (VoLTE) ஆதரவு
- 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டுகளுக்கான ஆதரவுடன் 32ஜிபி வரை விரிவாக்கக்கூடியது
- இன்-பில்ட் எப்எம் ரேடியோ ஆதரவு (In-built FM Radio)
- 1450mAh நீக்கக்கூடிய பேட்டரி
- யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் ஆதரவு (USB Type C Charging Support)

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
HMD 130 Music HMD 150 Music Feature Mobile Phones Launched in MWC 2025
Read Entire Article