ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு திறமை

தி.மு.க., மதுரை வடக்கு மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி விளாங்குடி கலைஞர் திடலில் நடைபெற்றபோது உறுப்பினர்கள் கூட்டத்தில், உரையாற்றிய தகவல் தொழில் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், “இந்த அமைப்பு மாற்றம் ஏற்பாடு எதற்காக எத்தகைய சூழ்நிலையில் நடந்திருக்கிறது. அமைச்சர் மூர்த்தி அவர்களுக்கு தரப்பட்டிருக்கிற பொறுப்பு என்னவென்று நான் பல இடங்களில் கூறியிருக்கிறேன். ஒரு கட்சியை நடத்துவதற்கு அடிப்படை திராவிட இயக்க தத்துவத்தின் இன்றைக்கு செயல்பாடாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை நடத்துவதற்கு முன்பு முதலமைச்சர் தலைவர் அவர்கள் பல்வேறு திறமை வாய்ந்த பல்வேறு பொறுப்புகளை வெவ்வேறு நபர்களுக்கு வழங்குவார். சிலருக்கு திரளாக கூட்டம் கூட்டிய ஏற்பாடு சிறந்திருக்கும், சிலருக்கு ஊடகத்தில் சிறப்பாக பேச பெருமை இருக்கும், சிலருக்கு சிறப்பாக நிர்வாகம் செய்யத் திறமை இருக்கும், சிலர் விளம்பரத்தில் சிறப்பாக இருப்பார்கள். ஆனால் ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு தத்துவ இயக்கத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கிய விளக்கம் அதை செயல்படுத்தும் திறமையும் தேர்தலில் வெற்றி பெறுவது தான்.

இதுதான் ஆரம்பம் அமைச்சர் பி.டி.ஆர் நெகிழ்ச்சி

ஏனென்றால் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் ஆட்சியை அமைக்க முடியாது. கொள்கை அடிப்படையில் எந்த நிதி ஒதுக்கி சட்டம் உருவாக்கி சமுதாயத்தின் மாற்றத்தை கொண்டுவர முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால் இறுதியில் சுமார் 20 ஆண்டுகள் வரலாற்றில் மதுரை மாவட்டத்தில் திமுக அந்த அளவுக்கு பெரிய வெற்றி பெற்றதில்லை. இருக்கிற 10 தொகுதியில் குறிப்பாக 2016 தேர்தலில் 10 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகள்தான் வெற்றி பெற்றோம். 2021 தேர்தலில் பத்தில் ஐந்து தொகுதிகள் வெற்றி பெற்றோம். மாநில சராசரி பார்த்தால் இது குறைவாக தான் இருக்கிறது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும்போது பல தொகுதிகளில் நூறு சதவீதம் வெற்றி பெற்ற சூழ்நிலையில் மேற்கு தொகுதியில் சுமார் 28, 30 சதவீதம் மாமன்ற உறுப்பினர் பொறுப்புகளில் வெற்றி பெறவில்லை. எனவே இந்த கூட்டம் சிறப்பாக அமைந்திருக்கு நல்ல ஆரம்பம் என்று நான் கூறினாலும் மூன்று முறை தொடர்ந்து இந்த தொகுதியில் மாற்று கட்சி வெற்றி பெற்ற சூழ்நிலையில் நமக்கெல்லாம் உழைப்புக்கு இது ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

வெற்றியை உறுதி செய்வோம்

எந்த தொகுதியிலும் தொடர்ந்து மூணு நாள் முதல் தோல்வி அடைந்த பிறகு மாற்றத்தை உருவாக்குவது கூடுதல் கடினமாக இருக்கும். எனினும் அமைச்சர் மூர்த்தி திறமை வாய்ந்தவர். எனவே இந்த இலக்கை இந்த முறை உறுதியாக அடைவோம் என்று கருதி நீங்கள் எல்லாரும் வேறுபாட்டை விட்டுவிட்டு ஒற்றுமையாக செயல்படனும். ஏனென்றால் எனக்கு அனுபவம் இங்கே எல்லாம் கழகத்தில் எல்லோரும் ஒற்றுமையோடு செயல்படுகிறோமோ அங்கே எல்லாம் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது என்று தான் என்னுடைய அனுபவம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை திட்டம் வகுத்து உருவாக்கி அதன் தலைமை பொறுப்பேற்று நடத்திய எனக்கு 234 தொகுதி தகவலும் ஓரளவுக்கு இன்னும் மனதில் இருக்கிறது. ஆச்சரியப்பட தக்க அளவு என்று இல்லாமல் அனைவரும் நல்ல முயற்சி எடுத்து இந்த வெற்றியை உறுதி செய்வோம்” என்றார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Keezhadi Excavation: கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக பணி, தொல்லியல் துறை விறுவிறு !