ARTICLE AD BOX

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில் காதலை மையமாகக் கொண்டு காதல் காவியமாக எடுக்கப்பட்டது. 1997 ஆம் வருடம் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் வென்றது.
இந்த படத்தில் ரோஸாக நடித்து உலகப் புகழ்பெற்ற நடிகை தான் கேட் வின்ஸ்லட். இவர் தற்போது புது அவதாரம் எடுத்துள்ளார். அதாவது இதுவரை படங்களில் நடிகையாக மட்டுமே வளம் வந்த இவர் தற்போது இயக்குனராக மாறியுள்ளார். நெட் பிளிக்ஸ்க்காக “குட் பாய் ஜூன்” என்ற படத்தை இயக்கி தயாரித்து அதில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.