ARTICLE AD BOX
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் சனிக்கிழமை முதல் நடைபெற உள்ள நிலையில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அந்த அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த அணியின் முக்கிய பலமாக கருதப்படுவது பேட்டிங் வரிசை. அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்றிக் கிளாஸன் ஆகியோர் எந்த அணிக்கு எதிராகவும் பெரிய இலக்கை நிர்ணயிக்கக்கூடிய வீரர்களாக திகழ்கிறார்கள். கடந்த ஆண்டு அதிரடி பாணியை கடைப்பிடித்த இந்த அணி அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தது.
இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டையும் கவனித்து அதற்கு தகுந்தவாறு வீரர்களை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக மூன்றாவது வரிசையில் இசான் கிஷான் மற்றும் சுழற்பந்து வீச்சில் ராகுல் சகாரை ஹைதராபாத் வாங்கி இருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் வலுவாக திகழும் நிலையில் மிடில் வரிசை மட்டும் அந்த அணிக்கு பலவீனமாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.
சன்ரைசர்ஸ் அணியின் பிரச்சனை
இந்த சூழ்நிலையில் ஆகாஷ் சோப்ரா கூறும் போது “ஹைதராபாத் அணியில் இரண்டு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சகால் இருக்கிறார். கடந்த வருடம் அவர்களுக்கு இருந்த பிரச்சனை என்னவென்றால், அவர்கள் 250 ரன்கள் வரை அடித்தால் 250 ரன்களையும் விட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் உண்மையாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை தேடிக் கொண்டிருந்த நிலையில் அதற்குத்தான் ராகுல் சகாரைக் கண்டுபிடித்தார்கள்.
இதையும் படிங்க:18 கோடிக்கு தகுதியா? என நினைத்தபோது என் மனதில் இதுதான் தோன்றியது – பஞ்சாப் அணி வீரர் சஹால் பேட்டி
முகமது சமி மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் பந்துவீச்சில் வலு சேர்க்க, மீதம் இருக்கும் பிரச்சனையை பேட் கம்மின்ஸ் கவனித்துக் கொள்கிறார். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயமாக பேட்டிங் வரிசையில் 5வது எண் வரை நிதிஷ்குமார் ரெட்டி தயாராக இருப்பார். ஆனால் ஆறாவது வரிசையில் பினிஷிங் செய்யக்கூடிய வீரர் யார்? என்ற கேள்வி இருக்கிறது. அங்கு தான் பிரச்சனை உள்ளது என்று உணர வேண்டும். இந்த 6, 7 மற்றும் 8 வரிசைகளில் மற்ற அணிகளை போல் இருக்கக்கூடிய பினிஷர்கள் இந்த அணியில் இல்லை. மேலும் இரண்டாவதாக அணியின் முதன்மை வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு பதிலாக பேக்கப் செய்யக்கூடிய வீரர்களும் இல்லை. இதுதான் இந்த அணியின் பிரச்சனை” என்று ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.
The post இதுல கோட்டை விட்டீங்களே பாஸ்.. மத்த டீம் மாதிரி.. சன்ரைசர்ஸ் இதுல ஸ்ட்ராங் இல்ல – ஆகாஷ் சோப்ரா appeared first on SwagsportsTamil.