Dhoni IPL Retirement: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நடக்க உள்ள ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎலில் பங்கேற்பதற்காக சென்னை வந்த தோனி, தான் அணிந்திருந்த டி-சர்ட் மூலம் தான் சொல்ல வந்ததை ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

IPLஇல் இருந்து ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி?

தனது எதிர்கால திட்டங்களை ரசிகர்களுக்கு சொல்ல எம்.எஸ். தோனி, தனக்கு என தனி பாணியை கையாண்டு வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் நடுவே திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதேபோல, கடந்த 2020 ஆம் ஆண்டு, இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி தனது ஓய்வு முடிவுகளை அறிவித்து வரும் தோனி, IPLஇல் இருந்து ஓய்வு பெறும் முடிவையும் தனது பாணியிலேயே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Morse code மூலம் சொன்ன மெசேஜ்:

ஐபிஎல் 2025 தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தனது பாணியிலேயே ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை ரசிகர்களிடம் தோனி தெரியப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்த தோனியின் டி-சர்ட்டில், "One last time" என எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்படாமல் மறைமுகமாக அப்படி எழுதப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, Morse code மூலம் தான் சொல்ல வந்ததை தோனி சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Morse code என்றால் புள்ளிகள், கோடுகள் வழியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு வழி. தோனியின் டி-சர்ட்டில்

என குறிப்பிடப்பட்டிருந்தது.

ChatGPTயில் மேலே குறிப்பிடப்பட்ட Morse codeஐ போட்டு தேடியதற்கு, அதில் ஒரு சிறு பிழை இருப்பதாகவும் ஆனால், அந்த பிழையை திருத்தினால் 'ONE LAST TIME' என அதற்கு பொருள்படும் என ChatGPT பதில் அளித்தது. இதன் மூலம், தோனி தனது கடைசி ஐபிஎல் தொடரை ஆட உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.