இது வேற ரகம்.. ரூ.2499-க்கு 480mAh பேட்டரி.. 360 டிகிரி ஆடியோ.. IPX4 ரேட்டிங்.. ANC டெக்னாலஜி.. எந்த மாடல்?

19 hours ago
ARTICLE AD BOX

இது வேற ரகம்.. ரூ.2499-க்கு 480mAh பேட்டரி.. 360 டிகிரி ஆடியோ.. IPX4 ரேட்டிங்.. ANC டெக்னாலஜி.. எந்த மாடல்?

Gadgets
oi-Harihara Sudhan
| Updated: Saturday, March 22, 2025, 16:23 [IST]

ஆடியோ பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் 360 டிகிரி ஸ்பாஷியல் ஆடியோ, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், கேமிங் லோவ் லேட்டன்சி, 480mAh பேட்டரி, 100 மணி நேரங்களுக்கு பிளேபேக், ஃபாஸ்ட் சார்ஜிங், கூகுள் ஃபாஸ்ட் பேர், மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி போன்ற பீச்சர்களுடன் போட் நிர்வனா கிரிஸ்டல் (boAt Nirvana Crystl) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது. டிரான்ஸ்பரன்ட் சார்ஜிங் கேஸ் கொடுக்கும் இந்த போட் மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

போட் நிறுவனத்தில் பிரீமியம் ஆடியோ பீச்சர்களை கொடுக்கும் மாடலாக இந்த போட் நிர்வனா கிரிஸ்டல் இயர்பட்ஸ் வெளியாகி இருக்கிறது. பெயருக்கு ஏற்ப டிரான்ஸ்பரன்ட் சார்ஜிங் கேஸ் (Transparent Charging Case) கிடைக்கிறது. அதேபோல இயர்பட்களும் டிரான்ஸ்பரன்ட் பாடி கொடுக்கிறது. இந்த டிசைனை போலவே பீச்சர்களும் பிரீமியமாகவே இருக்கின்றன.

இது வேற ரகம்.. ரூ.2499-க்கு 480mAh பேட்டரி.. 360 டிகிரி ஆடியோ மாடல்!

போட் நிர்வனா கிரிஸ்டல் அம்சங்கள் (boAt Nirvana Crystl Specifications): கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் விரும்படி 360 டிகிரி போட் ஸ்பாஷியல் ஆடியோ (boAt Spatial Audio) மற்றும் போட் சிக்னேச்சர் சவுண்ட் (boat Signature Sound) சப்போர்ட் கொண்ட 10எம்எம் டிரைவர்கள் கிடைக்கின்றன. இதுபோக 32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த ஏஎன்சி (ANC) டெக்னாலஜி மூலம் மியூசிக் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களையும் அதிக நாய்ஸ் கொண்ட இடங்களிலும் கிரிஸ்டல் கிளியராக கேட்டு கொள்ள முடியும். போட் அடாப்டிவ் ஈகியூ (boAt Adaptive EQ) கிடைப்பதால், கஸ்டமைசபிள் ஈகியூ செய்து கொள்ளலாம். ஏஎன்சி மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களுக்கு என்விரான் மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் கிடைக்கிறது.

இந்த ஈஎன்எக்ஸ் டெக்னாலஜியுடன் (ENx Technology) 4 மைக்குகள் கிடைக்கின்றன. இந்த போட் நிர்வனா கிரிஸ்டல் மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால் சார்ஜிங் மற்றும் பேட்டரியில் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதாவது, பட்களில் தலா 70mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 480mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரி மூலம் 100 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். டைப்-சி (Type-C) போர்ட்டுடன் ஏஎஸ்ஏபி சார்ஜ் (ASAP Charge) கிடைக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 220 நிமிடங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். இந்த போட் நிர்வனா கிரிஸ்டல் மாடலில் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

Take a Poll

கேமிங் பிரியர்களுக்கான லோவ் லேட்டன்சி கேமிங் மோட் (Gaming Mode) கிடைக்கிறது. 60ms லோவ் லேட்டன்சியில் அவுட்புட் பெற்று கொள்ளலாம். மேலும், கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair), மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி (Multi Device Connectivity) சப்போர்ட் கிடைக்கிறது. போட் இயரபில்ஸ் (boAt Hearables) ஆப் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த போட் நிர்வனா கிரிஸ்டல் மாடலில் பிளேசிங் ரெட் (Blazing Red), குவாண்டம் பிளாக் (Quantum Black) மற்றும் எல்லோ பாப் (Yellow Pop) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. இந்த பிரீமியம் மாடலின் விலை ரூ.2,499ஆக இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் பிளிங்கிட் (Blinkit) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
boAt Nirvana Crystl With 60ms Low Latency 480mAh Battery Launched Check Specifications Price
Read Entire Article