கேமரா அசுரன்.. 90W சார்ஜிங்.. 200எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே..புதிய விவோ போன் ரெடி.. எந்த மாடல்?

1 day ago
ARTICLE AD BOX

கேமரா அசுரன்.. 90W சார்ஜிங்.. 200எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே..புதிய விவோ போன் ரெடி.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Sunday, March 23, 2025, 7:10 [IST]

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்200 அல்ட்ரா (vivo x200 ultra) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விவோ எஸ்200 அல்ட்ரா போனின் கேமரா சென்சார் படங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி விவோ எஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 50எம்பி சோனி எல்ஒய்டி-818 (Sony LYT-818) பிரைமரி கேமரா + 50எம்பி எல்ஒய்டி-818 அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி சாம்சங் எச்பி9 டெலிபோட்டோ (Samsung HP9 telephoto)லென்ஸ் என்கிற கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். ஏற்கனவே வெளியான விவோ எஸ்200 அல்ட்ரா போனின் அம்சங்களை பார்க்கலாம்.

கேமரா அசுரன்.. 90W சார்ஜிங்.. 200எம்பி கேமரா.. புதிய விவோ போன் ரெடி..

விவோ எஸ்200 அல்ட்ரா அம்சங்கள் (vivo x200 ultra specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொண்டு வெளிவரும். புளூடூத் 5.4 ஆதரவு இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பன அம்சங்களுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகமாகும்.

6000mAh பேட்டரி வசதியுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

குறிப்பாக 6.8-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே (2K LTPO OLED display)உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த விவோ எஸ்200 அல்ட்ரா போனில் உள்ளது. 24ஜிபி வரை மெமரி மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த விவோ எஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

குறிப்பாக விவோ எஸ்200 அல்ட்ரா போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த விவோ போனில் இருக்கும். குறிப்பாக இந்த விவோ அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Source: 1, 2, 3

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Vivo X200 Ultra camera sensors officially revealed: check details here
Read Entire Article