ARTICLE AD BOX
பார்மசி மருந்துகள்
நம்மில் பெரும்பாலான நபர்கள் தலைவலி உடல் வலி மற்றும் அசாதாரண பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் பார்மசியில் சென்று மாத்திரையை வாங்கி போட்டுக் கொள்வார்கள். மருத்துவமனைக்கு சென்று அங்கே காத்திருந்து, மருத்துவரை பார்ப்பதும் அதிகப்படியாக செலவு செய்வதும் அவர்களுக்கு அனாவசியமாக தோன்றக்கூடிய விஷயமாகும்.
குறியீடுகள்
ஆனால் இது போல நாம் செய்வது நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது நமக்கு புரிவதில்லை. சில மருந்து அட்டைகளில் குறியீடுகள் இருக்கும். அவை, மிக முக்கியமானது அது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிவதில்லை.
இதையும் படிங்க: இப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் மாரடைப்பு வரும்.. உஷார்.. இவ்வளவு ஆபத்துக்களா.?!
சிவப்பு கோடு
சிவப்பு கோடிட்டு இருக்கும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எக்காரணத்தை கொண்டும் எடுத்துக் கொள்ளவே கூடாது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்டி பயோடிக்ஸ் மாத்திரைகளில் தான் இந்த சிவப்பு கோடு காணப்படுமாம்.
உயிரே போகலாம்
அது மருத்துவர் கொடுத்த அளவில் மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மீறி அதிகப்படியாக நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் அது நம் உயிரை எடுக்கக்கூடிய அளவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?!