இது என்ன புது ட்ரெண்டா? பெயரை மாற்றிய மற்றுமொரு நடிகர்- குழப்பத்தில் திரையுலகம்

23 hours ago
ARTICLE AD BOX

நடிகர் கௌதம் கார்த்திக் அவருடைய பெயரை மாற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் கௌதம் கார்த்திக்.

இவர், நடிப்பில் கடைசியாக ஆகஸ்ட் 16 1947 என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக எந்தவித படங்களிலும் கமிட்டாகவில்லை.

இதனை தொடர்ந்து, தற்போது 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வைரலாக உள்ளது.

பெயர் மாற்றம்

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தனது பெயரை திடீரென்று மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கௌதம் கார்த்திக் என்று அழைக்கப்படும் பெயருடன் புதிதாக ராம் என்ற வார்த்தையை சேர்த்துள்ளார். இனி வரும் நாட்களில் அவரை 'கௌதம் ராம் கார்த்திக்' என அழைக்க வேண்டும் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிஸ்டர் எக்ஸ் படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. அந்த படத்தின் டீசர் அப்டேட் குறித்த போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் கூட கௌதம் கார்த்திக் பெயர் அவரது புதிய பெயரான கௌதம் ராம் கார்த்திக் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

புது பெயருடன் வெளியாகக்கூடிய முதல் படமான மிஸ்டர் எக்ஸ் எப்படியான வரவேற்பை கொடுக்கப் போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவரை போன்று ஜெயம் ரவியும் அவருடைய பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Read Entire Article