ARTICLE AD BOX
இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. 5200mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. வந்தது புதிய Redmi போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் பங்களாதேஷில் ரெட்மி ஏ5 (Redmi A5) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு இந்த புதிய ரெட்மி போன் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் வாங்க கிடைக்கிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் இந்தியாவில் போக்கோ 71 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இப்போது இந்த ரெட்மி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி ஏ5 அம்சங்கள் (Redmi A5 specifications): 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

எச்எம்டி போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் யுனிசாக் சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. அதாவது யுனிசாக் டி7250 (Unisoc T7250) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஏஜி ஃப்ரோஸ்டட் கிளாஸ் (AG frosted glass) மற்றும் ஓவல் வடிவ ( oval-shaped) கேமரா உள்ளது. குறிப்பாக இந்த போனின் பின்புறம் 32எம்பி கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன். மேலும் பெய்ஜ் (beige),ப்ளூ (blue), கிரீன் (Green), பிளாக் (black) உள்ளிட்ட நிறங்களில் இந்த ரெட்மி போன் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.
5200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆனால் இதற்குப் பதிலாக 25W சார்ஜிங் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ரெட்மி போனின் விலை BDT 10,999 (இந்திய மதிப்பில் ரூ.7,854)-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.
source: gizmochina