இது எண்ணிக்கை பற்றியது அல்ல! அதிகாரத்தை பற்றியது! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

6 hours ago
ARTICLE AD BOX

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. உதய் சீனிவாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

அப்போது கூட்டம் தொடங்கியதும் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது :- பல மொழி, இனம் என பன்முகத்தன்மை கொண்ட பல மாநிலங்களில் இருந்து இங்கு ஒன்றுகூடியுள்ளோம். கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள். 
கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை, குழப்பமாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத ஒற்றுமயுடன் தமிழ்நாடு செயல்படுகிறது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும்.  மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும்.

தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும் என தெரிவித்துள்ளார். 

Read Entire Article