‘இதற்கெல்லாமா திருவிழாக்கள்’ என ஆச்சரியமூட்டும் உலகக் கொண்டாட்டங்கள்?

4 days ago
ARTICLE AD BOX

திருவிழாக்கள் என்பது உலகளவில் பரவியுள்ள கலாசாரங்களின் வழியாக பாரம்பரியங்கள், நம்பிக்கைகள் மற்றும் பகிரப்பட்ட மகிழ்ச்சியின் நிலையை தெரிவிக்கின்றன.

ரியோ கார்னிவல், பிரேசில்: ரியோ கார்னிவல் (Rio Carnival, Brazil) 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளால் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கக் கலாசாரங்களின் கலவையாகும். இது கத்தோலிக்க மதத்தின் ஈஸ்டர் காலத்திற்கு முந்தைய கடைசி பெரிய கொண்டாட்டமாகவும் கருதப்படுகிறது. பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் தொடங்கி மார்ச் முதல் வாரத்தில் முடியும் 5 கட்ட பிரேசில் நாட்டின் திருவிழா. இதில் நடத்தப்படும் தனித்துவமான ஊர்வலங்களைத் தாண்டி, ரியோ கார்னிவல் இசை, நடனம் மற்றும் படைப்பாற்றலின் துடிப்பான அடையாளமாகும். இறகு ஆடைகளுடன் கூடிய விரிவான ஊர்வலங்கள், துடிப்பான சாம்பா நடனங்கள், தாளங்கள் பிரமிக்க வைக்கும் சூழ்நிலையை உருவாக்குகின்றன.

லா தோமாட்டினா, ஸ்பெயின் (La Tomatina, Spain): புனோலில் நடக்கும் இந்த தனித்துவமான திருவிழா ஒரு உற்சாகமான அனுபவத்தைத் தருகிறது. ஸ்பெயின் நாட்டில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி திருவிழா நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் மக்கள் தெருக்களில் ஓருவர் மீது ஒருவர் தக்காளி பழங்களை வீசி எறிந்து விளையாடுவார்கள். கிட்டத்தட்ட 20,000 பேர்களுக்கு மேல் கலந்து கொள்ளும் இந்த விழாவில் அன்றைய தினம் 1,50,000 கிலோவுக்கு மேல் தக்காளி செலவாகுமாம். உலகின் மிகப்பெரிய உணவுச் சண்டையாக பார்க்கப்படும் இந்த விழாவில் தக்காளி சண்டையோடு திருவிழாவில் ஊர்வலங்கள், இசை மற்றும் நடனங்களும் இடம்பெறுகின்றன. இது தக்காளிச் சண்டையைத் தாண்டிய வண்ணமயமான சூழ்நிலையை உருவாக்குகிறது. லா தோமாட்டினாவின் தோற்றம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அது 1940களில் உள்ளூர் இளைஞர்களிடையேயான ஒரு சண்டையில் இருந்து உருவானதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மனித உடலுக்கு புரோட்டீன் சத்து ஏன் அவசியம்?
Amazing world celebrations

அக்டோபர்பெஸ்ட், ஜெர்மனி(Oktoberfest, Germany: முனிச்சில் நடைபெறும் இந்த புராண பீர் திருவிழா மில்லியன் கணக்கானவர்களை ஈர்க்கிறது. பாரம்பரிய பவாரியன் உணவு, இசை மற்றும் பீரை ரசிக்கும் விருந்தினர்களால் திருவிழாவின் ராட்சத கூடாரங்களில் பீர்கள் நிரம்பி வழிகின்றன. பீருக்கு அக்டோபர்பெஸ்ட் பெயர் பெற்றிருந்தாலும் பொழுதுபோக்கு சவாரிகள், விளையாட்டுகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வண்ணமயமான சூழ்நிலையுடன் அக்டோபர்பெஸ்ட் சிறப்புறுகிறது. அக்டோபர்பெஸ்ட் 1810ல் பேவரியன் இளவரசர் லூட்விக் மற்றும் தனது மனைவி தெரேசியாவின் திருமணத்தை கொண்டாடுவதற்காக தொடங்கினார்.

மெக்சிகோ நாட்டில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத இறுதியில் ‘டே ஆப் த டெட்' என்ற திருவிழா நடைபெறுகிறது. ஆண்களும் பெண்களும் எலும்புக்கூடு முகமுடியுடன் ஆடி பாடும் ஊர்வல திருவிழா இது. இது எப்படி வந்தது தெரியுமா? 2015ம் ஆண்டு ‘ஸ்பெக்டர்' என்ற ஜேம்ஸ் பாண்டு படத்தில் மெக்சிகோ நாட்டில் நடக்கும் ஒரு விழாவாகக் காட்ட நடத்தப்பட்டது. அது நன்றாக இருக்கவே தொடர்ந்து திருவிழாவாகக் கொண்டாட மெக்சிகோ அரசு முடிவு செய்து தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ‘சோம்பேறிகள் தினம்' கொண்டாடுகிறர்கள். அன்று தங்களது வீட்டிலிருக்கும் படுக்கை, தலையணை என எல்லாவற்றையும் நடுவீதிகளில் போட்டு ஆட்டம் பாட்டம் என்று நாள் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்து தூங்குகிறார்கள். இப்படி செய்வதால் தங்களது மனக்கவலைகள் குறைந்து நிம்மதி பிறப்பதாக அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். இந்த நாள் 1985 முதல் கொண்டாப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மனதிற்கு எரிச்சலூட்டும் விஷயங்களை மகிழ்ச்சியாக மாற்றும் மந்திரம்!
Amazing world celebrations

‘ஸ்மோக் பீஸ்ட்’ (smoke feast): இது ஸ்காண்டர்போர்க் விழா என்றும் அழைக்கப்படுகிறது. இது டென்மார்க்கில் ஆகஸ்ட் இரண்டாம் வார இறுதியில் நடைபெறும் வருடாந்திர இசை விழாவாகும். ஸ்காண்டர்போர்க் அருகே உள்ள ஒரு பீச் காட்டில் இது நடக்கின்றது. டென்மார்க்கின் மிக அழகான திருவிழா இது. இதில் 8000க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு ராக், பாப், ஹிப் ஹாப், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் இசைகளை வழங்கி தங்களின் திறமைகளைக் காட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதைக் காண வருகின்றனர். 1980ம் ஆண்டு 7 இசைக் குழுவினரோடு இந்த விழா தொடங்கியது. அப்போது 600 பேர்தான் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Read Entire Article