இதய நோயாளிகளின் உயிரை காக்கும் அதிநவீன செயற்கை இதயம்!

11 hours ago
ARTICLE AD BOX

உடலில் பழுதடையும் உறுப்புகளுக்கு மாற்றாக செயற்கை உறுப்புகள் வைக்கப்படுகின்றன. பிறப்பு குறைபாடு, விபத்து அல்லது அறுவை சிகிச்சை காரணமாக ஒருவரின் உடல் உறுப்பு சேதமடைந்தால், செயற்கை உறுப்புகள் உதவியாக இருக்கும். கைகள், கால்கள், மார்பகம் மற்றும் முகம் போன்வற்றிற்கு செயற்கை உறுப்புகள் வருகின்றன.

அந்த வகையில் இதயநோயாளிகளுக்கு வரமாக வந்தது தான் செயற்கை இதயம். தற்போது, அதிநவீன செயற்கை இதயமும் கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது இதய உறுப்பு மாற்று செய்ய முடியாத தீவிர இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை இதயம் பொருத்தப்படுகிறது. தானம் செய்யப்பட்ட இதயத்திற்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு அல்லது இதயம் வேலை செய்யாமல் போகி இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்ற நோயாளிகளுக்கு ஆயுளை நீட்டிக்க செயற்கை இதயம் பயன்படுத்தப்படலாம்.

செயற்கை இதயம் என்பது உங்கள் இதயத்தில் உள்ள வென்ட்ரிக்கிள்கள் சரியாக வேலை செய்யாதபோது அவற்றை மாற்றும் ஒரு இயந்திர பம்ப் ஆகும்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும்போது உடலில் ரத்தத்தை பம்ப் செய்வதற்கான ஒரு தற்காலிக தீர்வாக இது உள்ளது. எனவே செயற்கை இதயம் என்பது நவீன மருத்துவ அறிவியலில் ஓர் சாதனை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதயத்தில் வென்ட்ரிக்கிள்கள் என்பது இதயத்தின் கீழ் அறைகள் ஆகும். இடது மற்றும் வலது என்று 2 வென்ட்ரிக்கிள் உள்ளது. இந்த வென்ட்ரிக்கிள் பழுதாகும் நிலையில் இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

ஆனால், செயற்கை இதயத்தை வைத்து அதை முறையாக இயக்கிய உடன், அந்த சாதனம் பழுதடைந்த வென்ட்ரிக்கிள்களுக்கு மாற்றாக இயங்கி உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்யும் வேலையை செய்கிறது. இதன் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியமான ரத்த சுழற்சி மீட்டு எடுக்கப்படுகிறது. இந்த செயற்கை இதயம், இதயத்தின் இரண்டு மேல் அறைகள் மற்றும் முக்கிய தமனிகளோடு இணைக்கப்படும். இந்த செயற்கை இதயம் இயங்குவதை உடலுக்கு வெளியே வைக்கப்படும் ஏர் கம்ப்ரஷர் என்ற ஒரு சிறிய காற்று அமுக்கி கட்டுப்படுத்துகிறது.

இந்த காற்று அமுக்கியில் இருந்து செயற்கை இதயத்திற்கு இரண்டு டிரைவ் லைன்கள் எனப்படும் குழாய்கள் வழியாக காற்று உள்ளே செலுத்தப்படுகிறது.

அப்போது, வென்ட்ரிக்கிள் அறைக்குள் செல்லும் ரத்தத்தை இந்த காற்று சீரான வேகத்தில் உடலில் சுற்றி வரச் செய்கிறது. இது ஆரோக்கியமான சுழற்சியை மீட்டெடுக்கிறது. இதன் மூலம் இதயம் சீராக இயங்குவதாக மருத்துவ துறையினர் கூறுகின்றனர். இந்த சாதனம் இதய மாற்று அறுவை சிகிச்சையைப் போன்ற ஒரு நடைமுறையில் பொருத்தப்பட்டு, உடலுக்கு வெளியே ஒரு இயக்கி சாதனத்தால் இயக்கப்படுகிறது.

உங்கள் மார்பில் ஒரு இயந்திர சாதனம் இருப்பது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் செயற்கை இதயங்கள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும்போது அவர்களுக்குத் தேவையான உதவியை வழங்கின்றன.

உங்களுக்கு பின்வரும் நிலைகள் இருந்தால் முழுமையான செயற்கை இதயம் தேவைப்படலாம்:

  • பிறவியிலேயே (பிறக்கும்போதே) இதயப் பிரச்சினை

  • இதய செயலிழப்பு

  • மாரடைப்பு வந்தவர்கள்

  • கார்டியோஜெனிக் அதிர்ச்சி

  • இடது வென்ட்ரிகுலர் உதவி சாதனம் (LVAD) தோல்வி

  • ஒரு ஆபத்தான அரித்மியா (அசாதாரண இதய தாளம்)

  • கார்டியோமயோபதி (இதய தசை நோய்)

இதையும் படியுங்கள்:
இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவும் வாழ்க்கை முறை!
artificial heart

மேலே உள்ள பிரச்சனைகள் இதயம் சீராக செயல்படுவதை பாதிக்கிறது. இந்த பிரச்சனைகளால் உங்கள் இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய முடியாமல் போகலாம். இவர்களுக்கு செயற்கை இதயங்கள் ஒரு வரப்பிரசாதமாகும்.

நீங்கள் மாற்று அறுவை சிகிச்சை பெறும் வரை செயற்கை இதயம் ஒரு தற்காலிக தீர்வாகும். மருத்துவர்கள் செயற்கை இதயத்தை 'மாற்று அறுவை சிகிச்சைக்கான பாலம்' என்று குறிப்பிடுகின்றனர்.

மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும்போது பல மாதங்கள் செயற்கை இதயத்துடன் வாழலாம். இன்றைய செயற்கை இதயங்களைப் பொறுத்தவரை, ஒன்றைப் பெற்றவர்களில் 60% முதல் 80% பேர் தங்கள் மாற்று அறுவை சிகிச்சைகளைப் பெறும் அளவுக்கு நீண்ட காலம் உயிர்வாழ்கிறார்கள். அறுவை சிகிச்சையிலிருந்து நீங்கள் மீண்டவுடன், முழு செயற்கை இதயத்தைப் பெறுவதற்கு முன்பு இருந்ததை விட நீங்கள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் உணருவீர்கள். ஏனென்றால், இந்த சாதனம் உங்கள் உடலில் இரத்தத்தை சீரான வேகத்தில் உடலில் சுற்றி வரச் செய்கிறது.

உங்கள் சேதமடைந்த வென்ட்ரிக்கிள்களை முழுமையான செயற்கை இதயத்துடன் மாற்றுவது உங்களுக்கு வலிமையை மீண்டும் பெற உதவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் இதயம் சீராக இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கான 6 அறிகுறிகள்!
artificial heart
Read Entire Article