ARTICLE AD BOX
நாம் சாப்பிடும் உணவுகளில் மிக ஆரோக்கியமானதாக மருத்துவர்கள் கூறுவது இட்லிதான். ஆறு மாத குழந்தைக்கு கூட முதல் உணவாக இட்லியை தான் கொடுக்க சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த இட்லியில் உளுந்து கலந்து தயாரிப்பதால் இதில் இருக்கும் நார்ச்சத்து எளிதில் ஜீரணத்தை தருகிறது.
மேலும் இதில் காரமோ, எண்ணெயோ சேர்க்கப்படுவதில்லை. ஆவியில் வேக வைத்து எடுக்கப்படுவதால் மிக ஆரோக்கியமான உணவு என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இட்லியை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை தரலாம்.
பெங்களூரு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்குள்ள உணவகங்களில் இருந்து 251 இட்லி மாதிரிகள் பெறப்பட்டன. அதை, ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் 54 மாதிரிகளில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.
அதாவது இட்லி வேக வைக்கக்கூடிய தட்டுகளில் பிளாஸ்டிக் தாள்கள் வைக்கப்படுகின்றன. அதில் இருக்கும் ரசாயனங்கள் இட்லிக்குள் புகுந்து நச்சுக்களாக மாறுகின்றன. எனவே, இந்த இட்லிகளை சாப்பிடும் போது சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.