ARTICLE AD BOX
இட்லி கடை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷின் 52 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்க டு தான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிரண் கௌஷிக் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்து சில மாதங்களுக்கு முன்னரே தேனி பகுதியில் தொடங்கப்பட்டு பொள்ளாச்சி போன்ற பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த படப்பிடிப்பில் அருண் விஜய் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்ட வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. எனவே படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.