ARTICLE AD BOX
லண்டன்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மார்ச் 19ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது. சமுதாயத்திற்கு சிறப்பான பங்காற்றியதற்காக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘பிரிட்ஜ் இந்தியா’ அமைப்பும், சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. இது சினிமாவிற்காக மட்டுமல்லாமல், பொது சேவைக்காகவும், கலாச்சார தலைமைத்துவத்திற்காகவும் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து குடியுரிமை சிரஞ்சீவிக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இது உண்மையில்லை என்பது தெரிந்தது. இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய நடிகர் ஒருவருக்கு கிடைக்கப்போகும் கவுரவம் காரணமாக சினிமா ரசிகர்கள் பலரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.