இக்னோ பல்கலை 38வது பட்டமளிப்பு விழா: நாடு முழுவதும் 3.16 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்

11 hours ago
ARTICLE AD BOX

சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் (இக்னோ) 38வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தேசிய அளவில் மொத்தம் 3.16 லட்சம் பேர் பட்டம் பெற்றனர். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 90 மாணவர்கள் பட்டம் மற்றும் டிப்ளோமோவை நேரில் வந்து பெற்றுக் கொண்டனர். மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம்-இந்திய வேளான் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் குல்தீப் குமார் லால் கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கினார். அப்போது பேசிய அவர், தொடர் கற்றல் மற்றும் உயர் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். இக்னோ சென்னை பிராந்திய மையத்தின் முதுநிலை மண்டல இயக்குநர் பன்னீர்செல்வம் தனது உரையில், கடந்த ஆண்டில் பிராந்திய மையம் அடைந்த சாதனைகள், வளர்ச்சி, மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பேசினார்.

The post இக்னோ பல்கலை 38வது பட்டமளிப்பு விழா: நாடு முழுவதும் 3.16 லட்சம் பேர் பட்டம் பெற்றனர் appeared first on Dinakaran.

Read Entire Article