ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி?

15 hours ago
ARTICLE AD BOX

Published : 05 Mar 2025 09:23 AM
Last Updated : 05 Mar 2025 09:23 AM

ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி?

<?php // } ?>

துபாய்: ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது இந்​திய அணி. துபா​யில் நேற்று நடை​பெற்ற அரை இறுதி ஆட்​டத்​தில் டாஸ் வென்று ஆஸ்​திரேலிய அணி பேட்​டிங் செய்​தது. அந்த அணி​யில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்​சர் ஜான்​சன் ஆகியோ​ருக்கு பதிலாக கூப்​பர் கானொலி, தன்​வீர் சங்கா ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர்.

ஆட்​டத்​தின் முதல் பந்தை இந்​தி​யா​வின் முகமது ஷமி வைடாக வீசி​னார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட பந்தை ஆஸ்​திரேலிய அணி​யின் டிரா​விஸ் ஹட் லெக் திசை​யில் அடிக்க முயன்​றார். ஆனால் பந்து அவரது மட்​டை​யில் பட்டு ஷமியை நோக்கி வந்​தது. அதை வலது கையால் ஷமி பிடிக்க முயன்ற போது நழுவி கீழே விழுந்​தது.

இதனால் ஹெட் டக்-அவுட் ஆவதில் இருந்து தப்​பித்​தார். முதல் இரு ஓவர்​களில் ஆஸ்​திரேலிய அணி 3 ரன்​கள் மட்​டுமே சேர்த்​திருந்​தது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் கூப்​பர் கானொலி, கே.எல்​.​ராகுலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார் இந்த ஓவரில் ஒரு ரன் மட்​டுமே சேர்க்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து கேப்​டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க டிரா​விஸ் ஹெட் மட்​டையை சுழற்​றி​னார்.

ஹர்​திக் பாண்​டியா வீசிய 4-வது ஓவரில் பவுண்​டரி, சிக்​ஸர் பறக்​க​விட்ட டிரா​விஸ் ஹெட்,’ முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்​சி​யாக 3 பவுண்​டரி​களை விரட்டி அசத்​தி​னார். தொடர்ந்து குல்​தீப் யாதவ் வீசிய 8-வது ஓவரில் நேர் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார்.

அதிரடி​யாக விளை​யாடிய டிரா​விஸ் ஹெட் 33 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் எடுத்த நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்தை சிக்​ஸருக்கு அடிக்க முயன்ற போது லாங் ஆஃப் திசை​யில் ஷுப்​மன் கில்​லிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்​கிய மார்​னஷ் லபுஷேன் 36 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​களும் ஜோஷ் இங்​லிஷ் 12 பந்​துகளில் 11 ரன்​களும் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர்.

27 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 144 ரன்​கள் என்ற நிலை​யில் ஸ்டீவ் ஸ்மித்​துடன், இணைந்த அலெக்ஸ் கேரி அற்​புத​மாக விளை​யாடி​னார். நிதான​மாக விளை​யாடி தனது 35-வது அரை சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 96 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 73 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகமது ஷமி வீசிய தாழ்​வான ஃபுல்​டாஸில் போல்​டா​னார்.

இதையடுத்து களமிறங்​கிய கிளென் மேக்​ஸ்வெல் 7 ரன்​னில் அக்​சர் படேல் பந்​தில் போல்​டா​னார். பென் ட்வார்​ஷுய்ஸ் 19 ரன்​களில் வருண் சக்​கர​வர்த்தி பந்​தில் வெளி​யேறி​னார். தனது 12-வது அரை சதத்தை நிறைவு செய்த அலெக்ஸ் கேரி 57 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து நேதன் எலிஸ் 10 ரன்​னில் முகமது ஷமி பந்​தி​லும், ஆடம் ஸாம்பா 7 ரன்​னில் ஹர்​திக் பாண்​டியா பந்​தி​லும் நடையை கட்ட ஆஸ்​திரேலிய அணி 49.3 ஓவர்​களில் 264 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி தரப்​பில் முகமது ஷமி 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். வருண் சக்​ர​வர்த்​தி, ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர்.

265 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணிக்கு ரோஹித் சர்மா வழக்​கம் போல் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். அதேவேளை​யில் நிதான​மாக விளை​யாடிய ஷுப்​மன் கில் 11 பந்​தில் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் பென் ட்வார்​ஷுய்ஸ் ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே வீசிய பந்தை கால்​கள் நகர்வு இல்​லாமல் விளை​யாடிய போது போல்​டா​னார்.

அதிரடி​யாக விளை​யாடிய ரோஹித் சர்மா 29 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் எடுத்த நிலை​யில் கூப்​பர் கானொலி பந்தை விளாச முயன்​ற​போது எல்​பிடபிள்யூ ஆனார். 7.5 ஓவர்​களில் 43 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் விராட் கோலி​யுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார். இதனால் இந்​திய அணி 19.4 ஓவரில் 100 ரன்​களை கடந்​தது. விராட் கோலி 53 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் அரை சதம் கடந்​தார்.

நிதான​மாக விளை​யாடிய ஸ்ரேயஸ் ஐயர் 62 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆடம் ஸாம்பா பந்​தில் போல்​டா​னார். விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 3-வது விக்​கெட்​டுக்கு 111 பந்​துகளில் 91 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து அக்​சர் படேல் களமிறங்​கி​னார். விராட் கோலி 51 ரன்​களில் இருந்த போது கூப்​பர் கானொலி வீசிய பந்தை லாங் ஆன் திசையில் அடித்தார். அப்​போது கிளென் மேக்​ஸ்​வெல் டைவ் அடித்து ஒற்றை கையால் பிடிக்க முயன்​றார். ஆனால் பந்து நழு​வியது.

அதிரடி​யாக விளை​யாட முயன்ற அக்​சர் படேல் 30 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் எலிஸ் பந்​தில் ஆஃப் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார். இதைத் தொடர்ந்து கே.எல்​.​ராகுல் களமிறங்​கி​னார். இந்​திய அணி 40 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 200 ரன்​கள் சேர்த்​தது. கடைசி 10 ஓவர்​களில் அணி​யின் வெற்​றிக்கு 65 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.

தன்​வீர் சங்கா வீசிய 41-வது ஓவரில் 8 ரன்​களும், பென் ட்வார்​ஷுய்ஸ் வீசிய அடுத்த ஓவரில் 9 ரன்​களும் சேர்க்​கப்​பட்​டன. ஆடம் ஸாம்பா வீசிய 43-வது ஓவரில் கே.எல்​.​ராகுல் மிட் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். இதே ஓவரின் 4-வது பந்தை விராட் கோலி லாங் ஆன் திசை​யில் விளாசிய போது பென் ட்வார்​ஷுய்​ஸிடம் கேட்ச் ஆனது.

விராட் கோலி 98 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் சேர்த்​தார். அப்​போது வெற்​றிக்கு 44 பந்​துகளில் 41 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. இதையடுத்து ஹர்​திக் பாண்​டியா களமிறங்​கி​னார். 44-வது ஓவரை வீசிய நேதன் எலிஸ் 3 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். தன்​வீர் சங்கா வீசிய அடுத்த ஓவரில் ஹர்​திக் பாண்​டியா சிக்​ஸர் பறக்​க​விட்​டார். இதனால் 5 ஓவர்​களில் 28 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வானது.

46-வது ஓவரை வீசிய நேதன் எலிஸ் ஒரு ரன்னை மட்​டுமே வழங்க இந்​திய அணிக்கு அழுத்​தம் அதி​கரித்​தது. ஆனால் ஆடம் ஸாம்பா வீசிய அடுத்த ஓவரின் கடைசி இரு பந்​துகளை ஹர்​திக் பாண்​டியா சிக்​ஸர்​களுக்கு பறக்​க​விட்டு மிரளச் செய்​தார். இதனால் 18 பந்​துகளில் 12 ரன்​கள் தேவை என அழுத்​தம் குறைந்​தது.

நேதன் எலிஸ் வீசிய 48-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய ஹர்​திக் பாண்​டியா 5-வது பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசை​யில் கிளென் மேக்​ஸ்​வெல்​லிடம் கேட்ச் ஆனது. ஹர்​திக் பாண்​டியா 24 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 28 ரன்​கள் சேர்த்​தார்.

அப்​போது வெற்​றிக்கு 6 ரன்​களே தேவை​யாக இருந்​தன. மேக்​ஸ்​வெல் வீசிய 49-வது ஓவரின் முதல் பந்தை கே.எல்​.​ராகுல் லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி அசத்​தி​னார். முடி​வில் இந்​திய அணி 48.1 ஓவரில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 267 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கே.எல்​.​ராகுல் 34 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​களும் ரவீந்​திர ஜடேஜா 2 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்​றில் ஆஸ்​திரேலி​யாவை இந்​திய அணி 14 வருடங்​களுக்​குப் பிறகு தற்​போது​தான் வீழ்த்​தி​யுள்​ளது. கடைசி​யாக கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் கால் இறுதி ஆட்​டத்​தில் அந்த அணியை இந்​தியா வென்றிருந்தது.

இன்றைய ஆட்டம்

2-வது அரை இறுதி
தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து
நேரம்: பிற்பகல் 2.30, இடம்: லாகூர்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article