ARTICLE AD BOX

Manikandan: ரைட்டர், இயக்குனர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் மணிகண்டன், கடந்த சில வருடங்களில் பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினிக்கு மகன்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இது போக நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
குறிப்பாக சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து உருவான ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு வேடத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். ஒருபக்கம் விக்ரம் வேதா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களுக்கு வசனமும் எழுதி இருக்கிறார். நரை எழுதும் சுய சரிதம் என்கிற ஒரு படத்தை இயக்கியும் இருக்கிறார்.
குட் நைட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக மாறினார். அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்து போய் நல்ல வசூலை பெற்றது. அதன்பின் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படமும் நல்ல விமர்சனத்தை பெற்றது. அவரின் குடும்பஸ்தன் படமும் அதிக நாட்கள் ஓடி வசூலை அள்ளியது.
இப்போதுள்ள இளம் நடிகர்களில் நல்ல சினிமா அறிவை கொண்டவர் மணிகண்டன். குடும்பஸ்தன் படம் வெளியானபோது அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளை பார்த்தால் அது புரியும். மணிகண்டன் தீவிர கமல் ரசிகர். பரிசோதனை முயற்சிகளாக கமல் செய்த படங்கள் மற்றும் அவரின் காமெடி படங்களை பல மணி நேரம் சிலாகித்து பேசுவார் மணிகண்டன்.
கமல் என்னவெல்லாம் யோசித்து அந்த காட்சியை உருவாக்கி இருப்பாரோ அதை சரியாக புரிந்து விவரிப்பதுதான் மணிகண்டனின் திறமை. எல்லோருக்கும் பிடிக்கும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், ஆஸ்கர் விருது பற்றி மணிகண்டன் பேசியிருக்கும் விஷயம் அவரின் நம்பிக்கையை பேசுகிறது.
சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டிருந்த காலத்திலேயே நான் தினமும் ஆஸ்கர் விழாவில் எப்படி பேசுவது என ரிகர்சல் செய்து கொண்டிருப்பேன். Sorry am not that good in english என்று சொல்லி ஆஸ்கர் மேடையில் பேசுவதை இன்னைக்கும் நான் ரிகர்சல் செய்வேன். அது நடக்குது.. நடக்குல. அது வேற விஷயம்.. இப்ப மட்டும் இல்லை, 10 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே குளிச்சிட்டு தலை துவட்டும் போது கூட இதை முதல்ல சொல்லணும்.. அப்புறம் இத சொல்லணும் என ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன்’ என சொல்லியிருக்கிறார்.