ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

3 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ராவல்பிண்டியில் மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மழையின் காரணமாக போட்டி நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஆட்டம் நடைபெறாவிட்டால் ஆஸி. அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் யார் அரையிறுதிக்கும் செல்வார்கள் என்பதில் சிக்கல் ஏற்படுமென கணிக்கப்படுகிறது.


2 (+2.140) புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் தெ,ஆ. முதலிடத்திலும் ஆஸி. 2 (+0.475) 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.

என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

1. வெற்றியினால் மாற்றம் வரும்

  • போட்டி நடைபெறாவிட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்படும். கடைசி போட்டியில் இரு அணிகளும் வென்றால் இரண்டுமே அரையிறுதிக்கு தகுதிபெறும்.

2. தெ.ஆ.வெற்றி, ஆஸி. தோல்வியடைந்தால் என்னாகும்?

  • இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா வென்றாலும் ஆப்கானிஸ்தானுடன் ஆஸி. தோற்றாலும் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதிபெறும்.

  • இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி பிப்.26இல் நடைபெறும். இது அரையிறுதிக்கான முக்கிய போட்டியாக இருக்கும்.

  • இதில் இங்கிலாந்து வென்றால் ஆஸி. 3 புள்ளிகளுடனே அரையிறுதிக்கு தகுதிபெறும்.

3. ஆஸி. வெற்றி, தெ.ஆ. தோல்வியடைந்தால் என்னாகும்?

  • இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா தோல்வியும் ஆப்கானிஸ்தானுடன் ஆஸி. வென்றாலும் ஆஸி. அரையிறுதிக்கு தகுதிபெறும்.

  • ஆப்கன் இங்கிலாந்தை வீழ்தினால் 3 புள்ளிகளுடன் தெ.ஆ. தகுதிபெறும்.

  • இங்கிலாந்து, ஆப்கன் ஒரேயொரு போட்டிகளில் மட்டும் வென்றால் இரண்டுமே வெளியேறும்.

4. ஆஸி., தெ.ஆ. தோல்வியடைந்தால் என்னாகும்?

  • ஆஸி. தெ.ஆ. இரண்டும் தோல்வியுற்றால் ஆப்கன் - இங்கிலாந்து ஆட்டதில் ஒரு அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.

  • 2ஆவது அணியாக ரன் ரேட் விகிதத்தில் ஆஸி. அல்லது தெ.ஆ. தேர்வாகும்.

முடிவு

மழையினால் ஆட்டம் ரத்தானால் அரையிறுதிக்கான வாய்ப்புகள் மேலும் கடினமாகும். இந்தப் போட்டி குறைவான ஓவர்கள் உடனாவது நடைபெற்றால் யார் வெற்றி பெறுகிறார்கள் அவர்கள் அரையிறுதிக்கு தகுதிபெறுவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article