ARTICLE AD BOX
பளிச்சிடும் மஞ்சள் நிற பூக்களை உடைய அழகிய குறுஞ்செடி மெல்லிய தட்டையான காய்களை உடையது தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தானே வளர்வது இதன் பட்டை தோல் பதனிடப் பயன்படுகிறது இலை பூ காய் பட்டை பிசின் வேர் ஆகிய அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன் உடையவை
சதை நரம்பு ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது விதை காம பெருக்கியாக செயல்படுகிறது
பூச்சூரனத்தையோ பூவை குடிநீராகி பாலில் கலந்தோ இதழ்களை கறி கூட்டாகவோ நாள்தோறும் பயன்படுத்த மேகவெட்டை தேக உச்சூடு உடல் நாற்றம் உடலில் உப்பு பூத்தல் வறட்சி ஆயாசம் நீங்கும் உடலுக்கு பலத்தை தரும் தேகம் பொன்னிறமாகும்
ஆவாரையின் பஞ்சாங்க சூரணம் வேர் இலை பட்டை பூ காய் 10 கிராம் வீதம் காலை மதியம் மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம் மதுமேகம் மிகு தாகம் மிகப் பசி உடல் மெலிவு, உடல் உடல் எரிச்சல் உடல் முழுவதும் வேதனை பல குறைவு மயக்கம் மூச்சுத் திணறல் ஆகியவை தீரும் 45, 90,135 நாட்கள் சாப்பிட வேண்டும்
ஆவாரம்பட்டை கஸ்தூரி மஞ்சள் ஒரு மிளகாய் சிறிது சாம்பிராணி நல்லெண்ணெயுடன் ஆவாரை தைலம் காய்ச்சி தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு வறட்சி எரிச்சல் குணமாகும்
10 கிராம் பட்டையை பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லி லிட்டராக காய்ச்சி 50 மில்லி லிட்டர் காலை மாலை குடித்து வர மதுமேகம் சிறுநீருடன் ரத்தம் கலந்து போதல் பெரும்பாடு தாகம் ஆகியவை தீரும்…