ARTICLE AD BOX

கோப்புப்படம்
பர்மிங்காம்,
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் நட்சத்திரமும், ஒலிம்பிக் சாம்பியனுமான அன்சே யங் (தென் கொரியா), 2-ம் நிலை வீராங்கனை வாங் ஷி யியுடன் (சீனா) மோதினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அன்சே யங் 13-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் வாங்கை வீழ்த்தி 2-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையரில் சீன வீரர் ஷி யு கி 21-17, 21-19 என்ற நேர் செட்டில் லீ சியாவ் ஹாவை (சீன தைபே) தோற்கடித்து கோப்பையை வசப்படுத்தினார்.