ARTICLE AD BOX

Image Courtesy: PTI
பர்மிங்காம்,
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்சயா சென், லி ஷி பெங் (சீனா) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட லக்சயா சென் 10-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் லி ஷி பெங்கிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.�