ARTICLE AD BOX
ஆர்டர் பறக்குது.. ரூ.12,499 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G specifications): ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) வசதியுடன் ரெட்மி 13 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைடன்ஸ் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரெட்மி 13 5ஜி போனில் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் 108எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5030mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது.
பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers), 3.5எம்எம் ஆடீயோ ஜாக் (3.5mm audio jack) வசதிகள் இந்த போனில் உள்ளன.சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வை-பை 806.11 ஏசி (Wi-Fi 6 802.11 ac), ஜிபிஸ் (GPS), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.