ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேல்முறையீடு முடித்துவைப்பு

20 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான நபர் நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற அனுமதிக்க கோரியும், தற்போதைய உடல் நலன் குறித்த மருத்துவ அறிக்கையை வழங்க உத்தரவிடக்கோரியும் அவரது மனைவி விசாலாட்சி மனு செய்திருந்தார். ஆனால், இதை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்ய அறிவுறுத்தி, மேல்முறையீடு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேல்முறையீடு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article